கீழவளவு மலையில் ‘அந்த’ நேரம்.. பள்ளி மாணவியை வீடியோ எடுத்த கும்பல்! மாஸ்டர் பிளானே காதலன் தானாம்!
மதுரை : ஆபாச வீடியோ எடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகை பணம் பறிப்பு செய்த காதலன் உள்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவனமாக இருக்கும்படி பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் பேஸ்புக் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் மதுரையில் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளம் மூலம், காதல் வலை வீசி அந்த மாணவியின் வாழ்வே பறி போயுள்ளது.

பள்ளி மாணவி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் வயது 21 இவருக்கும் மதுரை நகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே முகநூலில் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் மதுரையில் சில இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிவராமன் அந்த பள்ளி மாணவி இடம் ஆசைவார்த்தைக் கூறி கீழவளவு மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பாலியல் தொல்லை
அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் சிவராமனின் நண்பர்கள் ஆன மேலவளவு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்.உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் காதலர்கள் தனிமையில் இருப்பதை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அவர்களும் அந்த வீடியோ காட்சிகளை மாணவர்களிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்தனர்.

ஆபாச வீடியோ
மேலும் இங்கு நடந்ததை வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டார், பின்பு ஏற்கனவே சிவராமன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிறுமியை தொடர்பு கொண்டு ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டியதுடன் அவரிடம் நகை மற்றும் ரூபாய் 30 ஆயிரத்தை மிரட்டி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

திட்டமிட்டு வீடியோ
இவர்கள் தொல்லை அதிகமாகவே இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவுப்படி குற்றவாளிகளை கைது செய்ய புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் காதலன் சிவராமன் திட்டமிட்டு பள்ளி மாணவியை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தும் அங்கு நண்பர்களை வரவழைத்து அதனை விரிவாக பதிவு செய்ததும் தெரிய வந்தது.

பெரும் அதிர்ச்சி
இதனைத் தொடர்ந்து சிவராமன் விஜயகுமார் வினோத்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். சிறுமியின் காதலனான சிவராமன் திட்டமிட்டபடியே இந்த மிரட்டல் நாடகம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications