Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிப்பூரம், ஆடி வெள்ளி நாட்களில் கோவிலுக்கு வரவேண்டாம் - பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஆடிப்பூரம், ஆடி வெள்ளி நாட்களில் கோவிலுக்கு வர வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட கோவில் நிர்வாகங்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆடி வெள்ளி ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவில்களில் குவிந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆடி வெள்ளி முதல் ஞாயிறு வரைக்கும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி நாட்களில் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை தணிந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 23ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Aadippuram, Aadi Friday: Public darshan canceled in Tamil Nadu temples

இந்தநிலையில் கொரோனா 3வது அலை அச்சுறுத்தலும் நிலவியபடி இருக்கிறது. 3வது அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட செயல் திட்டக்குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய சந்தைகள், தெருக்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளதால் பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்ல முடியாததால் வாசலில் நின்று வழிபட்டு சென்றனர். கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூரம் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் திரள்வதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆலயங்களுக்கு புனித நீராட வரவேண்டாம் என்றும் அறிவித்தது.

அரசின் அறிவிப்பையும் மீறி ஆடி அமாவாசை நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் அளிக்கவும் திரண்டதால் காவல்துறையினர் அனைவரையும் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். புதன் கிழமை ஆடி பூரம் மற்றும் வரும் வெள்ளிக்கிழமை ஆடி வெள்ளி தமிழகத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடலில் இறந்த முதியோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி, பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஆடி அமாவாசைக்கு கடலில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.

இதை முன்னிட்டு காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும் சோதனைச்சாவடி அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில பக்தர்கள் இன்று காரில் வந்து ஏமாற்றத்துடன் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

Aadippuram, Aadi Friday: Public darshan canceled in Tamil Nadu temples

வேதாரண்யம் ஒன்றிய எல்லையான தாணி கொட்டகம், தாமரைபுலம், சங்கத்தலை பாலம் ஆகிய இடங்களில் தடைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க வரவேண்டாம் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதாரண்யத்திற்கு முதல் நாளே வந்து தங்கி கடலில் புனித நீராடிவிட்டு செல்வார்கள். இந்த ஆண்டு வெளியூர் பக்தர்கள் வராததால் கடற்கரை மற்றும் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை புதுஆறு படித்துறைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை நாளான நேற்றைய தினம் திருவையாறு ஐயாரப்பர் ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய காட்சி அளிக்கும் நிகழ்வு பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது.

Aadippuram, Aadi Friday: Public darshan canceled in Tamil Nadu temples

ஈரோடு மாவட்ட ஆலயங்கள் மூடப்பட்டன

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், சக்தி வேணுகோபால சுவாமி, தலையநல்லூர் பொன் காளியம்மன் கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி, பவளமலை முத்துக்குமார சுவாமி, தம்பிக்கலை அய்யன், கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றீஸ்வரர், நஞ்சை காலமங்கலம் மத்திய பூர்ஸ்வரர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில்களில் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நாகேஸ்வரர் குலவிளக்கம்மன், வைரா பாளையம் சோளீஸ்வரர், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில், கொங்கலம்மன் கோவில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் போன்ற கோவில்களிலும் 3 நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு, காரணம் பாளையம் அணைக்கட்டு, கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகர் அணை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே இந்து சமய அறநிலையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் புதன்கிழமை ஆடிப்பூரம் தினத்தில் பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு ஆடிப்பூரம் தினத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+