6 சிலிண்டர், அரசு கேபிள் ப்ரீ.. நீங்க பிரியாணி செய்யலாம், சீரியல் பார்க்கலாம்.. நமீதா கலகல!
மதுரை: தாமரைக்கு ஓட்டு போட்டால் சிலிண்டர்கள் கொடுக்கப்படும். நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம். இலவச அரசு ககேபிள் இணைப்பு கொடுப்போம். உங்களுக்கு பிடித்த சீரியல் பார்த்துகிட்டே இருங்க என்று நடிகை நமீதா கூறினார்.
தமிழகம் முழுவதும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்தவரும், நடிகையுமான நமீதா மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து சீமான் நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- 'வணக்கம் மச்சான்ஸ்'. வேட்பாளர் சரவணன் ட்ரஸ்ட் மூலமாக 20வருடமாக சேவை ஆற்றிவருகிறார்,. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியுள்ளார். 350 அறுவை சிகிச்சை இலவசமாக செய்துள்ளார்,.
ஒன்றுமில்லாத கட்சியில் நிறைய செய்த சரவணன், பாஜகவில் இணைந்ததன் மூலம் இனி மேல் மோடி போல உதவுவார். தாமரைக்கு ஓட்டு போட்டால் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வீடு தேடி வரும், 6 சிலிண்டர்கள் கொடுக்கப்படும். நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம்,. என்னையும் கூட கூப்பிடுங்க. நான் வருகிறேன். ஆனால் வெஜ்டேரியன் பிரயாணிதான் வேண்டும்.
இதேபோல் 1,500 ரூபாய் தருவோம்,. இடம் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவோம். வீட்டில் ஒரு நபருக்கு அரசு வேலையும், இலவச வாசிங்மெஷினும் தர போறேன், இலவச அரசு ககேபிள் இணைப்பு கொடுப்போம். உங்களுக்கு பிடித்த சீரியல் பார்த்துகிட்டே இருங்க. அதனால் தமாரைக்கு ஓட்டு போடுங்க. மதுரையில் தாமரை மலரும் தமிழகம் வளரும் என்று நமீதா கூறினார்.












Click it and Unblock the Notifications