• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தவப் புதல்வனின் ’கலகத் தலைவன்’ குறித்து தான் முதல்வருக்கு கவலை! அதிமுக ஆர்பி உதயகுமார் விமர்சனம்!

Google Oneindia Tamil News

மதுரை : தன்னிறைவு பெற்ற தமிழகமாக உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்த கொடுத்த முதல்வர் தற்போது தன் தவபுதல்வன் நடித்த கலகத் தலைவன் படத்தின் முன்னேற்றத்திற்கு மட்டும் கவனம் செலுத்துவது மக்களுக்கு கவலை அளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர்," மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினால் தான்அதன் நோக்கம் நிறைவேறும். இதுதான் நாம் காலம் காலமாக பார்த்து வருகிற மக்கள் சேவையினுடைய இலக்கணம்.

இந்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார், மக்களுக்கு சேவையாற்றி மக்கள் திட்டங்களை கடைகோடியில் உள்ள மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து, வரலாறு படைத்ததை நாம் இந்த நேரத்திலே நினைவு கூறுகிறேன். ஆனால் இன்றைய திமுக அரசியல் நிலை என்ன ?

கலகத் தலைவனை பாராட்டிய கழகத் தலைவர்! உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்! இன்று முதல் கொண்டாட்டம்! கலகத் தலைவனை பாராட்டிய கழகத் தலைவர்! உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்! இன்று முதல் கொண்டாட்டம்!

ஆர்பி உதயகுமார்

ஆர்பி உதயகுமார்

அத்தனை துறைகளும் இன்றைக்கு, ஒவ்வொரு துறைகளிலும் அமைச்சர்களுக்குள்ளே, விமர்சனம் செய்து கொண்டிருக்கிற அந்த நிலை தற்போது திராவிட முன்னேற்றக் கழக அரசிலே ஏற்பட்டிருக்கின்றன. அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் உண்மை நிலை என்றால் பயணிக்கும் பெண்களை ஓசிகிராக்கி என்று ஒரு அமைச்சரே விமர்சனம் செய்கிற கேலி செய்கிறார்.அதிகாரிகள் வரை அனைவருமே அமைச்சர்கள் சொல்லிக் கொடுத்த வழியிலே, இன்றைக்கு அந்த ஏழை எளிய சாமானிய தாய்மார்கள் அவசர அவசரமாக பஸ் நிறுத்தத்தை நோக்கி ஓடி வருகிறார்கள்,ஆனால் பஸ்ஸை நிறுத்தி ஏற்றி செல்வது இல்லை,

புகார்கள்

புகார்கள்

அது மட்டும் அல்ல சில தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் பஸ் நிறுத்திற்கு வருவதற்குள் பஸ் எடுத்துச் சென்று விடுகிறார்கள். ஒரு பாட்டி நான் கட்டணத்தை செலுத்தி விடுகிறேன், என்னை கௌரவமாக அரசு பஸ்ஸிலே ஏற்றி அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லுகிற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ரேசன் கடையில் அரிசி வழங்குவதே இல்லை, அப்படியே வழங்கினாலும் அது மனிதர்கள் சாப்பிடுகிற நிலையிலே தரம் இல்லை என்று, இன்றைக்கு நாடு எங்கு இந்த குறைபாடு இந்த புகார்கள் எதிரொலிக்கிறது .அதைத்தான் நிதித்துறை அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மக்கள் கண்ணீர்

மக்கள் கண்ணீர்

இந்த மக்கள் கண்ணீர் வடிப்பது இந்த அரசுக்கு புரிகிறதா? தெரிகிறதா? அறிந்திருக்கிறார்களா? என்பது வேதனையான விஷயமாக இருக்கிறது. அதேபோல ஆவின் பால் மக்களுக்கு குறைவில்லாமல் கிடைக்கிறது என்று சொன்னால், அதிலே விலைவாசி ஏற்றத்தோடு மட்டுமல்லாமல், ஸ்டார் ஹோட்டல் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஹோட்டல்களுக்கு மொத்தமாக அவர்கள் கொடுத்துவிடுகிற காரணத்தினாலே, ஏனைய மக்களுக்கு பால் விநியோகம் பற்றாக்குறைவாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் இன்றைக்கு பார்க்கிறோம்.

 அரசு கேபிள் டிவி

அரசு கேபிள் டிவி

இதைவிட கொடுமை என்றால், ஏழை எளிய மக்களுக்காக பொழுதுபோக்காக கொடுக்கக்கூடிய, அரசு கேபிள் டிவி இன்றைக்கு திட்டமிட்டு அதை முடக்கப்படுகிறது, கடந்த மூன்று நாட்களாக ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக ஆபரேட்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதேபோல மாணவர்கள் இன்றைக்கு ,போதைப் பொருளுக்கு அடிமையாக ஒரு அவல நிலை இன்றைக்கு இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது. அரசுதிட்டங்களின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை, அது மக்களிடத்திலே கடைக்கோடியில் கொண்டு போய் சேர்க்கவில்லை.

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

முதலமைச்சரும் சுகாதார துறை அமைச்சரும் பேசிய வீடியோ பதிவு வெளியே வந்தது. அதில் இந்த நாட்டு நடப்பை பற்றி விவாதித்து, தீவிரமான தீர்வு காண வேண்டும் என்று நடவடிக்கை எடுப்பார்கள் என்று, மக்கள் நம்பிக்கையோடு அந்த வீடியோ பதிவை பார்த்தால், அந்த வீடியோ பதிவிலே முதல்வர் தன் தவப்புதல்வன் உதயநிதி நடித்த கலகத் தலைவன் படத்தை பார்த்தீர்களா என அமைச்சரிடம் கேட்கிறார். நிர்வாகம் ஸ்தம்பித்து போய் இருக்கிறது .ஆனால் நம்முடைய முதல்வர் தவப்புதல்வன் நடித்த படத்தை பற்றி பேசியபோது, சின்ன தளபதி சின்னவர் படம் மிக நல்லா இருக்குது .படத்தில் வரும் பாட்டு நல்லா இருக்குது அமைச்சர் கூறுகிறார். தன்னிறைவு பெற்ற தமிழகத்தை உருவாக்குவேன் என்று சொன்ன முதல்வர், தன் தவப்புதல்வனுடைய முன்னேற்றத்தை மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்கிற கவலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.

English summary
Former AIADMK minister RB Udayakumar has severely criticized the Chief Minister who promised to make Tamil Nadu a self-sufficient state and is now focusing only on the progress of his son's film Kalaga Thalaivan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X