நூலைப் போல சேலை.. அப்படியே அப்பா மாதிரியே! ‘நீடூழி வாழ்க’ திமுகவை புகழ்ந்த ஓபிஎஸ்! உடனே வந்த ஓபிஆர்!
மதுரை : அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் புதுமைப்பெண் திட்டம் நீடூழி வாழ்க என ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், அவரது மகனும் வரவேற்றுள்ளார். இந்நிலையில், பழனியில் அப்பா ஓபிஎஸ் மாதிரியே ஓபிஎஸ் தியானம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுமைப் பெண் திட்டத்தை அறிவித்தார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்றும் பெயர் சூட்டப்பட்டது.

புதுமைப் பெண் திட்டம்
இந்நிலையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற புதுமைப் பெண் என்ற திட்டத்தை, சென்னையில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வரவு வைக்கப்படும். மேலும் இத்திட்டத்திற்காக மாநில அளவில் ரூ.698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த திட்டத்தினை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மாணவர்களுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கினர். இந்நிலையில் இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அரசு கொண்டு வந்துள்ள புதுமைப்பெண் திட்டம் நீடூழி வாழ்க" என கூறினார்.

ஓ.பி.ரவீந்திரநாத்
இதேபோல் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்றிருந்தார். நேற்று மாலை பழனி வந்ட்த அவர், தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக இலவச லேப்டாப், சைக்கிள் எனப் பல சலுகைகளை வழங்கினார். அதேபோல் தற்போது இருக்கிற அரசு மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்கிறேன்." என கூறினார்.

தியானம்
ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் புதுமைப்பெண் திட்டத்தையும் அவர் வரவேற்று இருப்பது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. அவரது மகனும் இதே போல் தான் பேசியிருக்கிறார். இதிலிருந்தே அவர்கள் திமுகவுக்கு செயல்படுவது உறுதியாகி உள்ளது என கூறுகின்றனர். அதே நேரத்தில் நேற்று பழனியில் தரிசனம் செய்த ஓ.பி. ரவீந்திரநாத் போகர் சமாதியில் தியானம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெரினாவில் ஓபிஎஸ் தியானம் செய்தது போலவே மகனும் தியானம் செய்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எடப்பாடி தரப்பு அதிமுகவினர் கடுமையாக இருவரையும் விமர்சித்து வருகின்றனர்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications