ட்விஸ்ட்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர்! தேர்தல் ஆணைய கடிதத்தால் குஷியில் ஓபிஎஸ்! என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை : தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பது எடப்பாடிபழனிசாமி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை தேர்தல் ஆணையமும் ஏற்று கொண்டுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற போதும் சரி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும் சரி தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் நெருக்கடியை சந்தித்து வருவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வாடிக்கையாக போய்விட்டது.
முதல்வராக பதவியேற்ற உடனேயே ஓ.பன்னீர்செல்வத்தின் நெருக்கடி, அதற்குப் பின்னர் அதிகாரம் மோதல், திமுகவின் எதிர்க்கட்சி அரசியல், பாஜகவின் மறைமுக நெருக்கடி என பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது.

ஓ.பன்னீர்செல்வம்
சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக பிரச்சாரத்திற்கு செல்லாமல் கலந்து கொள்ளாமல் கழன்று கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் பலனாக இரட்டை இலை என்ற பெயருக்காகவும் நான்காண்டுகளில் செய்த சில சாதனைகளுக்காகவும் குறிப்பிடத்தக்க அளவு சீட்டுகளை அதிமுக வென்றது. ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்பதற்கு கூட ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதியை பெற வேண்டி இருந்தது. அப்போதும் பாஜக தலைமையே பஞ்சாயத்து செய்து எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தியதாக ஒரு பேச்சு உண்டு.

பாஜக ஆதரவு
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறது. அதில் அதிமுக சார்பில் கலந்து கொள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு மீண்டும் எடப்பாடியை அவ்வாறு அழைக்கக்கூடாது என கடிதம் அனுப்பி இருக்கிறது.

தேர்தல் ஆணையம்
இதனிடையே தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பது எடப்பாடிபழனிசாமி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அதிமுகவுக்கு எழுதிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதியுள்ளார். மத்திய பொதுச்செயலாளர் என்றே அழைப்பு அனுப்பிய நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட வில்லை என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

ஒருங்கிணைப்பாளர்
ஆனால் அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
மாநில தேர்தல் ஆணையரின் அழைப்பு குறித்து விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்," அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் பல்வேறு பிரச்சினைகளை செயற்கையாக உருவாக்கினார்கள். ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை தேர்தல் ஆணையமும் ஏற்று கொண்டுள்ளது. ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்' என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications