Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர்..வாடிவாசலில் முகூர்த்தக்கால்..முதல்பரிசு கார் பெறுவது யார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு கார் பரிசளிக்கப்படும் என்று கூறினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், போட்டியை நடத்த அனுமதி மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் ஊர் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Alankanallur Jallikattu: Minister Moorthy announcement first prize car

தை முதல் நாள் முதல் தொடங்கி மூன்று நாட்கள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.

ஜனவரி 17ம் தேதி நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். அவர்களை சுற்றுலாத் துறையினர் போட்டி நடக்கும் நாளில் அலங்காநல்லூர் அழைத்துச் செல்வர்.

வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்காகவே அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே தற்காலிகமாக கேலரி அமைக்கப்பட்டிருக்கும். கூட்ட நெரிசல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலாத் துறையினர், அவர்க ளுக்கென்றே அமைக்கப்பட்ட கேலரியில் அமர வைக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

கடந்த ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் போட்டியைக் கண்டு களிக்க முடியாமல் சுற்றுலாத் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலர் விரக்தியில் போட்டியைப் பார்க்காமலே திரும்பிச் சென்றனர்.

இந்தப் போட்டியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து வரும் பார்வையாளர்கள் பலர் கையில் டோக்கன் பெற்று வந்தாலும் அவர்களால் இந்த கேலரியில் ஏறி இடம் பிடிக்க முடிவதில்லை. அலங்காநல்லூர் அருகே அமைக்க திட்டமிட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உள்ளூர் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலங்காநல்லூரில் போட்டியை வெளியூர் பார்வையாளர்களும் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Alankanallur Jallikattu: Minister Moorthy announcement first prize car

இப்போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு அன்பளிப்புகள் மிகப்பெரிய அளவில் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயபக்தியுடன் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நாட்டு மாடுகளை தங்கள் குழந்தைகளைப்போல் வருடம் முழுவதும் தினமும் பராமரித்து வளர்த்து, நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மண் குத்தும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

இன்றைய தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, அதிக காளைகளை அடங்கி ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு கார் பரிசளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளை பரிசோதித்து மருத்துவ சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காளைகளுக்கு மூன்றரை வயது நிரம்பி இருக்க வேண்டும். காளை உரிமையாளரின் ஆதார் எண் ஆகியவை கொடுத்த பின்னர் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை வைத்துதான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+