“காணாமல் போய்க்கொண்டிருக்கும் கட்சிகள்தான் விஜயை கூட்டணிக்கு அழைக்கின்றன” – அண்ணாமலை
மதுரை: தமிழ்நாட்டு அரசியலில் காணாமல் போகும் கட்சிகள்தான், விஜய்யை கூட்டணிக்கு அழைக்கின்றன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையை தானமாக கொடுத்திருக்க கூடாது. அவரின் இருக்கைக்காக பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் எனக்கு இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் இருக்கையில் இருந்து எழுந்த முழு வீடியோ தெளிவாக இருக்கிறது. அதேபோல அந்த இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் மகனின் நண்பர் உட்கார்ந்திருப்பது தெளிவாக இருக்கிறது.

நியாயப்படி மாவட்ட ஆட்சியர், உதயநிதி ஸ்டாலினுக்கும் மூர்த்திக்கும் இடையில் அமர்ந்திருக்க வேண்டும் . ஆனால் அதில் உதயநிதி ஸ்டாலின் மகன் உட்கார்ந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையை விட்டுக்கொடுத்தது மாபெரும் தவறு. அதிகாரிகள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க கூடாது" என்று கூறியிருந்தார். அதேபோல விஜய் குறித்து பேசிய அவர்,
"சமீபத்தில் ஒரு திராவிடக் கட்சித் தலைவர் விஜயை கூட்டணிக்கு அழைத்தார். எந்த கட்சி எல்லாம் தமிழ்நாட்டில் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் விஜயை கூட்டணிக்கு அழைக்கின்றனர். விஜய் மீது வைக்கும் நம்பிக்கையில் 10% ராகுல் காந்தி மீது செல்வப்பெருந்தகை வைக்க வேண்டும். இதே மதுரையில் செல்லூர் ராஜூ விஜயை கூட்டணிக்கு அழைத்தார். அதே வேலையைத்தான் செல்வப்பெருந்தகை செய்துள்ளார்.
பாஜக இதுபோல யாரையும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் வளர்ந்து வருகிறோம். இளைஞர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். அரசியலில் காமராஜரைப் போல் எளிமையாக மக்களை சென்று பார்ப்பதைத்தான் பார்த்துள்ளேன். விஜய் பரந்தூர் மக்களைச் சந்திக்க காவலர்களிடம் அனுமதி கேட்டிருப்பதை புதுமையாகப் பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பா தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை விஜய் தொடங்கியிருப்பது பெரும் கவனிப்புகளை ஏற்படுத்தயுள்ளது. இப்படி இருக்கையில் விஜய்யை பலரும் கூட்டணிக்கு அழைப்பதாக பேச்சுகள் அடிப்பட்டன. இது குறித்து அண்ணாமலை பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக!












Click it and Unblock the Notifications