தமிழ்நாட்டில் பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை - காயத்ரி ரகுராம்
மதுரை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழலில் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையே நிலவுகிறது என காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாஜகவின் கலை மற்றும் பண்பாட்டு பிரிவு மாநிலத் தலைவி காயத்ரி ரகுராம், மதுரை மாநகர மகளிர் அணி சார்பில் மதுரை சோமசுந்தரம் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது காயத்ரி ரகுராம் பேசுகையில், ''தமிழகத்தில் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆழமாக வேரூன்றி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் அருளால் இந்த ஆன்மிக பூமியில் பாஜக வென்றிருக்கிறது. தமிழகத்தில் பணபலத்தை எதிர்த்து போட்டியிட்டோம். ஆனாலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம். இதற்கு மிகப்பெரிய காரணம் மாவட்ட தலைவர் சரவணன்.
தமிழகத்தில் நேர்மையாக வெற்றி பெற்ற கட்சி பாஜக மட்டும் தான். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பெருவாரியான இடங்களில் வெற்றி பெரும்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதே இல்லை. தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே தெரிகிறது.
மத்திய அரசு உக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது தமிழகத்தை பொறுத்தவரையில் சில ஊடகங்கள் இதில் திமுக அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது'' என்று பேசியுள்ளார்.
பாஜக மதுரை மாநகர மகளிர் அணி சார்பில் மதுரை சோமசுந்தரம் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் பாஜக மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி மற்றும் கலை மற்றும் பண்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவி காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மருத்துவர் சரவணன் உற்சாக வரவேற்பு அளித்தார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications