கோ பேக் மோடி, வெல்கம் வைகோ.. இருவேறு போஸ்டர்களால் பரபரப்பு.. அதகளப்படும் மதுரை
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வரவேற்று பாஜக தரப்பில் ஆதரவு போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

எதிர்ப்புகள்
அவர் தமிழகத்துக்கு வந்தால் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இது ஒரு புறம் இருக்க டுவிட்டரிலும் மோடி எதிராக எதிர்ப்பலைகள் வீசுகிறது.

கறுப்பு கொடி
இந்நிலையில் தஞ்சாவூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்.

போஸ்டர்கள்
மேலும் கருப்பு பலூன்கள் சிபிஐ கூட கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து பறக்கவிடப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் வைகோவை வெறுப்பேற்றும் விதமாக பாஜகவினர் அவரை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

வழி மீது விழி
அந்த போஸ்டர்களில் நாளை கறுப்புக் கொடி காட்ட வருகை தரும் வைகோ அவர்களை பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் வரவேற்கிறோம். உங்களை வரவேற்று வழியனுப்ப பாஜக இளைஞரணி வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications