பிடிஆரை திடீரென தேடிச்சென்று சந்தித்த சி.ரங்கராஜன்.. 'பலமான கோரிக்கை'.. என்னவாக இருக்கும்?
மதுரை; முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும் 2020ம் ஆண்டின் தமிழக பொருளாதார சீரமைப்பு உயர்மட்ட குழுவின் முன்னாள் தலைவருமான சி.ரங்கராஜன், தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சென்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மாநில பொருளாதாரத்தை மீட்க ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருந்தார். இந்த குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.
ரங்கராஜன் குழு தமது அறிக்கையில், மருத்துவ வசதிகளுக்காக ரூ5,000 கோடி செலவிட வேண்டும்; மருத்துவ துறைக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. செங்கல்பட்டு அருகே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பூங்கா ஒன்றை உருவாக்கவும் ரங்கராஜன் குழு பரிந்துரைத்திருந்தது.

சிறப்பு தொழிற்பேட்டை
மேலும் துறைமுக வசதி கொண்ட கடற்கரை பகுதிகளில் மருந்துகள் தயாரிப்புக்கான தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்; சென்னை, கோவை அருகே பயோடெக் நிறுவனங்களுக்கான சிறப்பு தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்; நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை திட்டம் உருவாக்க வேண்டும் என்றும் ரங்கராஜன் குழு பரிந்துரைத்தது,

திடீர் சந்திப்பு
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து கடந்த ஐந்து நாட்களுக்க முன்பு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் பேசினார் இந்நிலையில் இன்று தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்

உயர்மட்ட குழு
இது தொடர்பாக பிடிஆர் வெளியிட்டுள்ள பதிவில். முன்னாள் RBI கவர்னர், MSE தலைவர் மற்றும் 2020ம் ஆண்டின் தமிழக பொருளாதார சீரமைப்பு உயர்மட்ட குழு முன்னாள் தலைவர் சி.ரங்கராஜன் அவர்கள் பல கருத்துகளை பகிர்ந்துகொண்டதோடு சில கோரிக்கைகளை முன்வைத்தார். எங்கள் குடும்பத்துடன் என் தாத்தா காலம் முதல் கொண்ட நட்பை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார் என்று கூறினார்.

எதிர்பார்ப்பு
இந்த சந்திப்பில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக சில கோரிக்கைகளை சி.ரங்கராஜன், முன்னிவைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதல்வருக்கான பொருளதார நிபுணர்களும பட்ஜெட் குறித்து ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்கள். எனவே இந்த முறை பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications