கஞ்சா வியாபாரிகளுக்கு "வசமாக செக் வைத்த" தமிழக போலீஸ்.. 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்
மதுரை: கஞ்சா வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில், போலீசார் அமைதியை உண்டாக்கும் பணிகளிலும ஈடுபட்டு வருகின்றனர். பழிக்குப்பழியாக கொலைகள் நடக்கும் பகுதியில், சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் அழைத்துப் பேசி, மேலும் சம்பவங்கள் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சிறைக்கு செல்வது, வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது என அது ஒரு குடிசை தொழிலாகவே நடந்து வருகிறது. எனவே கஞ்சா கடத்தல், விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை புதிய வழிமுறையை கையில் எடுத்துள்ளது.
கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது மட்டுமின்றி, அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 90 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக மதுரையில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 76 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 114 வழக்குகளில் தொடர்புடைய 191 வங்கி கணக்குகளும்முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications