வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று - என்ன வகை என ஆய்வு
வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக துவங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி மிகக்குறைவாக நாள் ஒன்றிற்கு 22 என பதிவானது. தற்போது படிப்படியாக ஏறிக்கொண்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை மற்றும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் பெரிய நகரங்களை தற்போது பல்வேறு இடங்களில் தினசரி ஒன்று இரண்டு பாதிப்புகள் என பதினேழு மாவட்டங்களில் நேற்றையதினம் பதிவாகின.
பொதுமக்கள் இந்த நேரத்தில் கொரோனா முடிந்து விட்டது, இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும். அதனை தலைதூக்காமல் இருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தைப் பொருத்தவரை 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது. இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிதளவிலான பாதிப்பு இருந்த நிலைமாறி 17 மாவட்டங்களில் ஒன்றிரண்டு என 150 வரை பரவியுள்ளதாக கூறினார்.
இதனிடையே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்தமாதிரியான கொரோனா என்று பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications