கருத்துக் கணிப்பில் திமிறும் விஜய்.. அடுத்த பிரதமரா? துணை ஜனாதிபதியே சொல்லிட்டாரே! தவெக உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கன்னடர், குஜராத்தை சேர்ந்தவர் இந்தியாவின் பிரதமராக வரும் போது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் பிரதமராக வரலாம் என்று குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனின் கருத்து தமிழ்நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வர் விஜய்க்கு தேசிய அளவில் இருக்கும் எழுச்சி காரணமாகவே, சிபி ராதாகிருஷ்ணன் இப்படியொரு கருத்தை சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தவெகவினர் முடிச்சு போடுகின்றனர்.

சமீப காலமாக தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்த இந்த பேச்சு, குடியரசு துணைத் தலைவர் வரை வந்துள்ளது. கடந்த வாரம் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் வந்த குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

CP Radhakrishnan Vijay Prime Minister

இதன்பின் மதுரை வந்த சிபி ராதாகிருஷ்ணன் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதன்பின் சிபி ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவின் பிரதமர் ஆக முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிபி ராதாகிருஷ்ணன், தமிழர் மட்டுமல்ல.. இந்தியாவுஇல் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த யாராக இருந்தாலும், அவர் பிரதமராக வர முடியும். அதற்கு ஜனநாயகம் வழிவகை செய்துள்ளது. ஒரு கன்னடர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமராகும் போது, தமிழரும் ஒருநாள் நிச்சயமாக பிரதமராவார் என்று பதில் அளித்தார்.

சிபி ராதாகிருஷ்ணனின் பதில் சாதாரண ஒன்றாக அமைந்தாலும், அது முதல்வர் விஜய்யின் பிரதமர் கனவுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே வட மாநிலங்களில், 'விஜய் தள்பதி' ரக ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகியது. அதேபோல் விஜய்யின் பேச்சுகள் ஏஐ மூலமாக அந்தந்த மாநில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியது.

அதேபோல் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் 9% ஆதரவுடன் 3வது இடத்தில் இருந்தார். இதனால் உற்சாகம் அடைந்த தவெக, ராகுல் காந்தி தான் விஜய் கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போகிறார் என்று பேச தொடங்கினர். இப்படியான சூழலில் சிபி ராதாகிருஷ்ணனின் கருத்து தவெகவினர் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தவெகவில் உள்ள ஒரு சில நிர்வாகிகளோ, சிபி ராதாகிருஷ்ணனின் கருத்தே விஜய்யின் எழுச்சியால் சொல்லப்பட்ட ஒன்று தான் என்று கூறத் தொடங்கி இருக்கின்றனர். இந்த பதில் விஜய்க்கான மறைமுக அங்கீகாரமாகவும், அடையாளமாகவும் மாறி இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் சிபி ராதாகிருஷ்ணனின் கருத்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் கவனம் பெறத் தொடங்கி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+