மதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன?
மதுரை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Recommended Video
மதுரை: திமுக பிரமுகர் ராஜா அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கே.புதூர் ராம வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 47 வயது. திமுக பிரமுகர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர்.. வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இதை தவிர, சேவல் சண்டையில் நிறைய ஆர்வம் உள்ளவர். இதனால் சுற்றுவட்டாரத்தில் ராஜா என்றால் ரொம்ப பிரபலம்.
இவர் நேற்றிரவு ஜவகர்புரம் டாஸ்மாக் கடைக்கு சென்று, மது குடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்தது. அவர்களை பார்த்ததும் அதிர்ந்து போன ராஜா, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் அந்த கும்பல் விடவில்லை.

ராஜாவை சுற்றி வளைத்து கொண்டு எந்த பக்கமும் ஓடவிடாமல் தடுத்து நிறுத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து பிணமானார். தகவல் அறிந்தது கே.புதூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதனால் இந்த கொலை நடந்தது என்று உடனடியாக தெரியவில்லை. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே தகராறும், வாக்குவாதமும் நடந்தது. இதில், ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கும் நடந்து வருகிறது. ஒருவேளை, இந்த விவகாரத்தில் ஸ்ரீதர் தரப்பினர் ராஜாவை பழி வாங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் 4 பேரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். எனினும் இறுதி விசாரணைக்கு பின்னரே ராஜாவின் படுகொலைக்கு உண்மை காரணம் தெரியவரும். ராஜா கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications