அரசு எதுவும் சொல்லலைன்னு கவலையில் இருந்தாங்களே.. மதுரை மக்களின் பல கால கனவு நினைவாகிறது.. நிம்மதி
மதுரை: மதுரையில் அமைய உள்ள ஐடி பார்க்கிற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான முக்கியமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தகவல் நிதிநுட்ப தொழில்நுட்ப நிறுவனங்களும், ஒரு சிறந்த உள்கட்டமைப்பு வசதியை பயன்படுத்தும் வகையில், டைடல் பார்க் (சென்னை) நிறுவனம் மதுரை மாட்டுத்தாவணியில் 5.60 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.400 கோடி மதிப்பீட்டில், ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க உள்ளது.

இத்திட்டத்தின் படி, 6.86 இலட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவிலான உள்கட்டமைப்பு வசதியினை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக செயல்முறை மேலாண்மை (BBM) நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் (Start ups) பயன்படுத்திக்கொள்ளும்.
இப்பூங்காவானது அதிநவீன தகவல் தொழில்நுட்ப கட்டிடமாக வடிவமைக்கப்பட உள்ளது. அதாவது உணவுக்கூடங்கள். மாடித் தோட்டம், பணி அழுத்த நிவர்த்தி இடங்கள் மற்றும் மழலையர் காப்பகம் போன்ற புதிய வசதிகள் இடம்பெறும். இந்த நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
ஜடி பூங்கா: மதுரையில் அமைய உள்ள ஐடி பார்க்கிற்கான மாதிரி வரைபடத்தை டாடா நிறுவனம் தமிழ்நாட்டின் டைடல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளதாம். இதையடுத்து விரைவில் ஐடி பார்க் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் திருச்சி & மதுரைக்கான டைடல் பார்க் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.
மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க்: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 2 மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று ட்வின் டவர் பாணியில் இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று வட்ட வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு கவனம்: தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது.
1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். முக்கியமாக பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை மனதில் வைத்து சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் ஐடி பார்க் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க் முடிவு; அதன் அடிப்படையில், மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் ஐடி பார்க் அமைப்பது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், தொழில் என்று வந்துவிட்டால் பெரிய தொழில் மட்டும் முக்கியமில்லை. சிறிய தொழிலும் முக்கியம்தான். அப்போதுதான் பரந்துபட்ட வளர்ச்சி ஏற்படும். பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம்.
பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம். என்று கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications