மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்பார்ம் போலயே! மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? மீண்டும் அழுத்திச் சொன்ன அமைச்சர் பிடிஆர்!

Google Oneindia Tamil News

மதுரை : இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து குடும்ப விவரங்கள் எடுக்கப்பட்டு வருகிறது, இந்தத் திட்டத்திற்கான காலத்தை முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார். திட்டம் எப்பொழுது செயல்படுத்தப்படும் என்பதை முதல்வர் அறிவிப்பார் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் அருகே வெள்ளிவீதியார் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசும்போது," தமிழ்நாட்டின் நிதிநிலை மிகவும் சிறப்பாக முன்னேறியுள்ளது என்றார்.

தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ 1000 எப்போது? 2023 பட்ஜெட் வரை பொறுங்க.. அமைச்சர் பிடிஆர் தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ 1000 எப்போது? 2023 பட்ஜெட் வரை பொறுங்க.. அமைச்சர் பிடிஆர்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மேலும்," 2003 முதல் 2014 ஆம் ஆண்டு வரை முதல் 3 ஆண்டுகள் ஜெயலலிதா முதல்வராகவும், அடுத்த ஐந்து ஆண்டுகள் கலைஞர் முதல்வராகவும் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஜெயலலிதா இருந்தபோது தமிழ்நாட்டின் நிதித்துறை சிறப்பாக முன்னேறி இருந்தது. வருமானத்தில் வட்டி 21% கட்ட வேண்டியிருந்தது அதன் பின்பு 11% குறைந்து இருந்தது. ஜெயலலிதா சிறைக்கு சென்று மற்றும் மறைந்த பிறகு 20% வட்டி வளர்ந்து இருந்தது.திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டு பெரிய முன்னேற்றம் திருத்த மதிப்பீட்டில் 11 ஆயிரம் கோடி என காண்பித்தோம்.

 வருமானமா? செலவா?

வருமானமா? செலவா?

நிதி அமைச்சர் அனைத்து துறை செயலர்களையும் அழைத்து கூட்டத்தை நடத்தி முதல் 6 மாதத்தில் வரவு, செலவு உள்ளது. திட்டமிட்டதை விட கூடுதலான வருமானமா? செலவா? இதற்கான வேறுபாடு எவ்வாறு உள்ளது. அதுவும் ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மாநில, மத்திய அரசு பங்கீட்டிலே கிடைக்கும் முழுவதுமாக மத்திய அரசு செலவுகள் செய்யாது. நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் எனக்கு மிகப்பெரிய திருப்தி உள்ளது.

சிறந்த நிதி ஆண்டு

சிறந்த நிதி ஆண்டு

அடுத்து வர கூடிய 2022 - 23 சிறந்த நிதி ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டத்தின் முடிவுகள் சட்டமன்ற உறுப்பினரின் கூட்டத்தில் வைக்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் குறிப்பு வெளியே சொல்ல கூடாது எனவே திருப்தியாக இருக்கிறது என்பதை மற்றும் தற்போது தெரிவிக்கிறேன். பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டத்தின் எல்லைக்குள் வரவேண்டும் நிதி கணக்கில் 3% மாநில சுய கடனை மீறக்கூடாது முதலீட்டாக இருக்கலாம் கடனாக இருக்கக் கூடாது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா அவர்கள் mission 2023 தொலைநோக்கு திட்டம். 2023 அதில் 3% முதலீடு செய்தால் 1.5% தனியார் உற்பத்தியில் முதலீடு செய்ய வேண்டும். இதனை நாங்கள் பின்பற்ற விரும்புகிறோம். இது உலக வங்கியின் திட்டம். 2022- 2023 ஆம் ஆண்டு 24 லட்சம் கோடி உற்பத்தியை எதிர்பார்க்கிறோம். 2024- 2025 ஆண்டு 30 லட்சம் கோடி உற்பத்தியை எதிர்பார்க்கிறோம் இது கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வாய்ப்பிருக்கும். இது மிகப்பெரிய மாற்றம் . கொரோனா கால கட்டம் வரை 30000 கோடி முதலீடு தாண்டியது இல்லை ஆனால் சென்ற ஆண்டு 36000 கோடி முதலீடு செய்துள்ளோம்.

மாதம் 1000 ரூபாய்

மாதம் 1000 ரூபாய்

100 கோடிக்கு மேல் உள்ள திட்டங்களுக்கான தலைவராக என்னை முதல்வர் தேர்வு செய்துள்ளார். அதற்கான கூட்டம் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து செயல் திறனை அதிகப்படுத்த வேண்டும் என கூறியுள்ளேன். முதலீடு செய்யும்பொழுது அதனை செயல்படுத்த செயல் திறன் மிகவும் முக்கியம். இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 வழங்குவது குறித்து குடும்ப விவரங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. எந்த தகவல், எந்த எல்லை என்பதில் 85% தெளிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான காலத்தை முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார். திட்டம் எப்பொழுது செயல்படுத்தப்படும் என்பதை முதல்வர் அறிவிப்பார்" என பேசினார்.

English summary
Family details are being taken regarding providing Rs 1000 to housewives and the Chief Minister has given us a time frame for this scheme. Tamil Nadu Finance Minister PTR Palanivel Thiagarajan said that the Chief Minister will announce when the scheme will be implemented.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X