ரத்தத்தின் ரத்தமே.. தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி வரணும்! ரத்தத்தில் கைநாட்டு வைத்து பறந்த கோரிக்கை!
மதுரை: வருகிற 30-ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் அவருக்கு மரியாதை செலுத்த பழனிச்சாமி மதுரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் ரத்தத்தில் கைநாட்டு வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கும் நிலையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அங்கு வந்திருக்கிறார்.
இதேபோல தமிழக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி என்பதை தாண்டி அப்பகுதி மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுள் போலவே பார்க்கின்றனர். விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அவரை தரிசிப்பதும் வழக்கம்.
அந்த வகையில் வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை, அதிகாரிகள், மாவட்ட காவல் துறையினர், அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். இதற்காக வருகிற 29ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மதுரை வருகை தர இருக்கிறார். அவர் வருகையை முன்னிட்டு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள வேண்டுமென அவருடைய கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் தங்களது பெயருடன் ரத்தத்தில் கைநாட்டு வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரத்தத்தின் ரத்தம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவினர் ரத்தத்தின் மூலம் அழைப்பு விடுத்திருப்பதாக கூறி வருகின்றனர் அதிமுகவினர்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம்












Click it and Unblock the Notifications