மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோகுல்ராஜ் வழக்கு.. யுவராஜுக்கு சாகும்வரை சிறை! தீர்ப்பு வந்ததும் கோர்ட்டுக்கு வெளியே என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

மதுரை: 2015 கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

Recommended Video

    கோகுல்ராஜ் கொலை வழக்கு.. யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல். கல்லூரி படித்து வந்த இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    உ.பி:பைனாகுலரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறையை 3 ஷிப்ட் போட்டு அகிலேஷ் வேட்பாளர்கள் கண்காணிப்பு உ.பி:பைனாகுலரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறையை 3 ஷிப்ட் போட்டு அகிலேஷ் வேட்பாளர்கள் கண்காணிப்பு

    இந்த நிலையில் 2015ம் ஆண்டு இவர் தொட்டி பாளையம் அருகே இருக்கும் ரயில் தண்டவாளம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

    மரணம்

    மரணம்

    இந்த கொலையில் யுவராஜுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையிலும், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையிலும் இவரை கைது செய்தனர். சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர்தான் யுவராஜ். இவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

    மாற்றம்

    மாற்றம்

    அதன்பின் இந்த வழக்கில் மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். யுவராஜின் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரிக்கப்பட்டது. ஒன்றரை வருடத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறிய நிலையில் 2 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் கோகுல்ராஜ் காதலித்து (இதில் சில குழப்பங்கள் உள்ளன) வந்த பெண் உட்பட பலரும் பிறழ் சாட்சியங்களாக மாறிய பின்பும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    இந்த ஆதாரத்தை வைத்தும், யுவராஜ் தொலைக்காட்சிகளில் கொடுத்த பேட்டியை வைத்தும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 5ம் தேதி யுவராஜ் மற்றும் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரது அருண் (கார் ஓட்டுனர்) சகோதரர்கள் குமார், சதிஷ் ஆகியோரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தண்டனை விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக இன்று பிற்பகலுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    ஆயுள் தண்டனை

    ஆயுள் தண்டனை

    இந்த நிலையில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சம்பத் குமார் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இரண்டாவது குற்றவாளி அருணுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, கிரிதர் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கூடுதல் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

    சந்திரசேகர்

    சந்திரசேகர்

    கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சதீஷ், ரகு, ரஞ்சித், செல்வராஜ், குமார் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் வழங்கப்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு 1 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளும் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும்; தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பு என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் மோகன் பேட்டி அளித்துள்ளார்.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    இந்த வழக்கு தீர்ப்பை தொடர்ந்து கோர்ட்டுக்கு வெளியே கொஞ்சம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. வழக்கறிஞர் மோகனின் முயற்சிதான் இந்த வழக்கு வெற்றிபெற காரணம் என்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. கோர்ட்டுக்கு வெளியே சில கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. கோர்ட்டுக்கு தீர்ப்பு விவரங்களை அறிய யுவராஜ் அழைத்து வரப்பட்ட போது அவர் கோஷம் எழுப்பிக்கொண்டு, தனக்கு தெரிந்தவர்களிடம் கத்தியபடி பேசிக்கொண்டே வந்தார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அங்கு அந்த நேரம் மட்டும் கொஞ்சம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. ஆனாலும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் தீர்ப்பு விவரங்கள் அறிவிக்கப்பட்டதும் அங்கு சாதி மறுப்பு ஆர்வலர்கள், தீண்டாமைக்கு எதிரான பல்வேறு அமைப்பினர் வெடி வெடித்து கொண்டாடினார்கள். நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து அங்கு இருந்த மக்களுக்கு ஸ்வீட் வழங்கி மக்கள் பலர் கொண்டாடினார்கள்.

    English summary
    Gokulraj case: Yuvaraj sentenced to 3 count life, what happened outside the court after the veridict?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X