முதல்ல திருப்புவனம் திருஞானத்துக்கு நாம நன்றி சொல்லியே ஆகணும்..!
அரசு பஸ் கண்டக்டர் திருஞானம் பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறார்
மதுரை: முதல்ல திருஞானத்துக்கு நாம் நன்றி சொல்லியே ஆகணும்.. கண்டக்டராக இருந்து கொண்டு, இப்படி ஒரு காரியத்தை மனசார செய்து வருகிறார் திருஞானம்!
கத்தரி கடந்து போனாலும் இந்த வெயிலு நம்மள விட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு போகாது. காலங்காலத்தாலேயே வியர்த்து வழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் குடிக்கிற தண்ணீருக்கு பஞ்சம் வந்துள்ளது.
இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு அரிய சேவையை செய்து வருகிறார் திருஞானம். இவர் ஒரு கண்டக்டர்! மதுரை To தஞ்சை செல்லும் அரசு பேருந்தில்தான் வேலை பார்க்கிறார். திருப்புவனத்தை சேர்ந்தவர். வயசு 45 ஆகிறது.

டிக்கெட்
சீட்டை விட்டு எழுந்து வந்து பயணிகளுக்கு டிக்கெட்டே தராத நிறைய கண்டக்டர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு கூட்டமானாலும், பயணிகள்தான் கண்டக்டரிடம் சென்று பஸ் டிக்கெட்டை வாங்கி கொள்வதும் ஆங்காங்கே நடக்கிறது.

குடிநீர்
ஆனால், திருஞானம் அப்படி இல்லை.. பயணிகளுக்கு டிக்கெட் தருவது அவரது டியூட்டி என்றாலும், கூடவே பயணிகளுக்கு குடிக்க தண்ணீரும் தருகிறாராம்.

60 லிட்டர்
இது வெயில் காலம் என்பதால், பஸ்ஸில் ஏறும் பெரும்பாலானோர் தாகத்தின் பிடியில்தான் இருப்பார்கள். அதற்காக எல்லாராலும் வாட்டர் பாட்டில் தூக்கி கொண்டு போகவும் முடியாது. இது மாதிரியான பயணிகளுக்குதான் குடிக்க தண்ணீர் தருகிறாராம் திருஞானம். அதுவும் தினமும் 60 லிட்டர் வரை இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்துவருகிறார்.
|
திருபுவனம் திருஞானம்
இந்த காரியத்தை அந்த பஸ்ஸில் சென்ற ஒருவர் போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மதுரை To தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் பயணிகளுக்கு தினமும் 60 லிட்டர் வரை இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்துவரும் அந்த பேருந்தின் நடத்துனர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த திருஞானம்(45). தாகம் தீர்க்கும் தங்க குணம் நற்செயல் நெஞ்சம் நெகிழ வைக்கிறது வாழ்த்துகள் அண்ணா" என்று பதிவிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications