விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விடிய விடிய மழை வெளுத்து வாங்கியதால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளம் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: சென்னை, மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரம், சேலம்,கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி முதலே பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 7ஆம் தேதியன்று சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் தலைநகரமே வெள்ளக்காடானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் கடந்த வாரம் முழுவதும் சென்னையில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த அதிகனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டமே உருக்குலைந்து போயுள்ளது. குமரி மாவட்டத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகச் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெள்ளக்காடான நகரங்கள்
நேற்று மாலை முதலே பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. விடிய விடிய பெய்த மழையால் சென்னை மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயார்
நவம்பர் 18.11.2021 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உணவு, குடிநீர் அவசியம்
அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செல்போன், வாட்ஸ் ஆப் எண்கள்
மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணிலும், 044-25619204, 044 25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற தொலைப்பேசி எண்களிலும் மற்றும் 9445477205, 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விடிய விடிய விடாமல் கொட்டிய தொடர் கனமழை வெள்ளம் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. வேலூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு,அரியலூர், தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல காஞ்சிபுரம், சேலம், கடலூர்,திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications