‛‛கமலுக்கு கடும் எச்சரிக்கை’’.. இந்தியன் 2 படத்துக்கு தடையா? மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
மதுரை: ‛இந்தியன் - 2’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் இந்த படத்துக்கு தடைக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோருக்கு கடும் எச்சரிக்கை விதித்துள்ள நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா நடிப்பில் இந்தியன் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து ‛இந்தியன் - 2’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு வந்தது.

இயக்குநர் சங்கர் திரைக்கதை எழுதி இயக்கி உள்ள ‛இந்தியன் - 2’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன்,
எஸ்ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தான் ‛இந்தியன் 2’ திரைப்படம் நாளை மறுநாள் (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே தான் 'இந்தியன் 2' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை எச்எம்எஸ் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‛‛மஞ்சா வர்மக்கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளித்து வருகிறேன். கடந்த 1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படத்துக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்மக்கலைகளை கற்றுக் கொடுத்தேன். இந்த வர்மக்கலை அனைத்தும் ரகசியமானவை. இதனால் அந்த படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.
தற்போது ‛இந்தியன் - 2’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் ஏற்கனவே நான் சொல்லி கொடுத்த முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். இதற்காக என்னிடம் தடையில்லா சான்று பெறவில்லை. இதனால் படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயரை சேர்க்க வேண்டும் என படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் பதில் அளிக்கவில்லை. இதனால் எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை 'இந்தியன் 2' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதாவது தங்களின் வழக்கறிஞர்கள் மூலம் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் சங்கர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதி, 'இந்தியன் 2' திரைப்படம் வரும் 12-ந்தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், விரைவாக பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். அதோடு விசாரணையை 11ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தார்.
இதற்கிடையே தான் இந்த விசாரணையின்போது தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் இருவரின் தரப்புக்கும் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையை விடுத்தது. அதாவது தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர்கள் நாளைய விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலே உத்தரவு என்பது பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு என்பது வழக்கில் ஆஜராகும் இயக்குநர் சங்கர் தரப்பு தாக்கல் செய்யும் பதில் மனு அடிப்படையில் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தான் நாளை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் எத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications