மதுரையில் எய்ம்ஸ் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கிய ஜப்பான் நிறுவனம்... கட்டுமானப்பணி விரைவில் தொடங்கும்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1,500 கோடி நிதியை ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
மதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூ.1,500 கோடி நிதியை ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் கட்டப்பட உள்ள நிலையில் மீதி நிதியை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகியும் ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம்
அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடங்கள் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கையெழுத்தான பின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க அரசு, எய்ம்ஸுக்கான இடத்தை ஒப்படைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது.

மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கீடு
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எப்போது தொடங்கும்
லோக்சபாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும்வரை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பற்றி முழு விவரங்களை தரும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஒன்றிய அரசிடம் கேட்டு இருந்தார். சு.வெங்கடேசன் விவரங்கள் கேட்ட நிலையில் ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2026ல் முடிக்கப்பட வாய்ப்பு
மொத்த திட்ட மதிப்பான ரூ.1977 கோடியில் ஜைக்கா நிறுவனம் மட்டும் ரூபாய் 1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் கட்டப்பட உள்ள நிலையில் மீதி நிதியை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் தமிழகத்தில் விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது தொடங்கும்
மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூனில் நடைபெற்றது. 1,978 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிகள் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2026-ல் நிறைவடைய உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இப்போதுதான் நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். விரைவில் கட்டுமானப்பணிகளை தொடங்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications