என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் கோழை.. சோர்வடைந்துவிட்டேன்.. மதுரை மாணவி தற்கொலை கடிதம்
மதுரை: அனைவரும் என்னிடம் அதிகம் எதிர்பார்த்தனர். நான் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போய்விடுவேன் என்ற அச்சத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன், என்னை மன்னித்துவிடுங்கள் என மதுரை மாணவி ஜோதி துர்கா தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் ஜோதி துர்கா குறிப்பிட்டிருக்கையில், அப்பா மறக்காம செக் அப்புக்கு போங்க. வழக்கம் போல நீங்கள் சந்தோஷமாக இருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்திருங்கள். அது உங்களால் மட்டும்தான் முடியும்.

மிகவும் பிடிக்கும்
நான் செல்கிறேன் அப்பா. நான் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை. ஸ்ரீதர் (சகோதரர்)- எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உனக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னை மன்னித்துவிடு ஸ்ரீதர். நீதான் சிறந்த சகோதரர். நான் ஒரு கோழை.

மரியாதை
உனது அன்புக்கும் மரியாதைக்கும் நான் தகுதியில்லாதவள். அப்பா, அம்மாவை நன்றாக பார்த்துக் கொள். எனக்காக அழ வேண்டாம். அம்மா, அப்பா கூட நீ மட்டும்தான் இப்போ இருக்கே. நீ சோகமாக இருந்தால் அவர்களும் சோகமாகிவிடுவார்கள். நீ பெரியவனாகிவிட்டாய், உயர் கல்விக்கு செல்கிறாய். அதனால் நன்றாக படி, என்னை மறந்துவிடு.

இரக்கம்
செல்போன்ல நிறைய நேரம் கேம் விளையாடாதே. அப்புறம் அதற்கு அடிமையாகிவிடுவாய். நீ இரக்கக் குணம் கொண்டவன் ஸ்ரீதர். நன்றாக படி, பொறுமையாக இரு. முட்டாள்தனமாக எதையும் வீணடித்து விடாதே. தேவிகா (சகோதரி)- நீ என்னை அதிகமாக நேசித்தாய். நீ எனக்காக எதையும் செய்தாய். எனக்கு ஆதரவாக இருந்தாய்.

ஸ்ரீதர்
நான் மதுரை வந்தபிறகு, உன்னை பார்க்காமல் வருந்தினேன். நான் உன்னை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடு. நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். ஸ்ரீதரையும் பார்த்துக் கொள்.

குற்றச்சாட்டு
இது யாருடைய தவறும் அல்ல. யாரும் யாரையும் குற்றம்சாட்டி கொள்ளாதீர்கள். அம்மு நீதான் என்னுடைய நண்பர். மாமா, அத்தை, தாத்தா, பாட்டி அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மேல் நீங்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காவிட்டால் உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகியிருக்கும். நான் சோர்ந்துவிட்டேன் என அந்த மாணவி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications