நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மா.சுப்பிரமணியன் விளக்கம்
மதுரை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக ட்விட்டரில் அறிவித்தனர்.
இது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன்பின்னர் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டது தெரிய வந்தது. வாடகை தாய் முறை என்பது நயன்தாரா வயிற்றில் கரு வளராமல், வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்து, இவர்கள் குழந்தை பெற்றுள்ளனர்.

சமூக வலைதளங்களில் எழுந்த விவாதம்
இதனைத்தொடர்ந்து வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது சரியா என்ற விவாதம் ஒரு பக்கம் எழுந்தது. அதேபோல் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளதாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

விதிமீறல்?
வாடகை தாய் மூலம் பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஷாரூக் கான் - கவுரி கான் உள்ளிட்ட பலரும் குழந்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் சினிமா பிரபலங்களில் முதல்முறையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் முதல்முறையாக குழந்தைப் பெற்று கொண்டுள்ளது. இது ரசிகர்களிடையே விவாதமாக மாறியுள்ளது. இதில் விதிமீறல் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை விசாரணை
இந்தியாவில் 21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். அதற்கு திருமணமாகி, கணவரின் ஒப்புதல் இருக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளது. இதனால் விதிமுறைகளை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என்று பார்க்கப்படும் எனவும், பொது சுகாதாரத்துறையின் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொண்டார்களா என்று விளக்கம் கோரப்படும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மா.சுப்பிரமணியன் விளக்கம்
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் விதிகளை பின்பற்றி குழந்தை பெற்றுக்கொண்டார்களா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் தான், விதிமீறல் இருக்கிறதா என்பது கண்டறியப்படும். அதன் பின்னர் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications