மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. பிப்ரவரி 28ல் திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. ஒரு வழியாக பணிகள் நிறைவு?
மதுரை: பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மார்ச் மாதம் முதல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்காள் இந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமான பணிகள் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின், 2024ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை வைத்து மிகப்பெரிய பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் மற்ற மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் திறப்பு விழா காணப்பட்டது. ஆனால் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்கப்படவில்லை. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்தார்.
எய்ம்ஸ் 3டி மாடல்
அப்போது ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதன்பின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி மாடல் வீடியோ வெளியிடப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில், ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது.
முதற்கட்ட எய்ம்ஸ் வளாகம்
முதற்கட்டமாக 1.05 லட்சம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், நர்சிங் கல்வி வளாகம், நிர்வாக மற்றும் ஆடிட்டோரியம் கட்டிடங்கள், பிரதான மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மொத்தம் 13 கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை மருத்துவமனை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது.
2ஆம் கட்டத்தில் என்ன?
இரண்டாம் கட்டத்தில் ஆடிட்டோரியம், குடியிருப்பு வளாகங்கள், இயக்குநர் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்ளிட்ட 16 கட்டிடங்கள் கட்டப்படவுள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தமாக 29 கட்டிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. தற்போது முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
பிப்ரவரி 28ல் திறப்பு?
பெயிண்டிங் பணிகள் மட்டுமே மீதமிருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28ஆம் தேதி திறக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வரும் மோடி, இதனை திறந்து வைக்க இருக்கிறார். மார்ச் மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவசரம் காட்டுவது ஏன்?
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று பார்க்கப்பட்டது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் விமர்சனத்தை கட்டுப்படுத்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications