2024 வாழ்த்துகள்? தப்பு தப்பு.. ராமர் ஆண்டுனு சொல்லுங்க.. மதுரையில் பாஜகவின் பரபர போஸ்டர்!
மதுரை: அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துக்கள் என மதுரை முழுவதும் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்நகரமே கோலாகலமாக தயாராகி வருகிறது.

அயோத்தியில் பல்லாயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், புதிதாக கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ராமருக்கு மிகப் பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளதால், அங்கு மிக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள். இதை கருத்தில் கொண்டே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம், அயோத்தி ஸ்மார்ட் நகரமாக உருமாறும் எனக் கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், “நாட்டின் 140 கோடி மக்களும் ஜனவரி 22ஆம் தேதி தங்கள் வீடுகளில் ராம ஜோதியை ஏற்ற வேண்டும். அன்றைய தினத்தை தீபாவளி போல கொண்டாட வேண்டும். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் நாட்டு மக்கள் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதே நாளில் எல்லோரும் இங்கே கூடுவது சாத்தியமற்றது. எனவே, ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடந்து முடிந்த பிறகு தங்களுக்கு ஏற்ற ஒரு நாளில் அயோத்திக்கு வருகை தரவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், இன்று நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாஜக மதுரை மாநகர் மாவட்டப் பொதுச் செயலாளர் குமார் என்பவர் சார்பில் மதுரையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், “தேசத்தின் அடையாளம் அயோத்தி ராமர் கோயில், கி.பி 2024 அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 2024 அடிக்கப்பட்டு, அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications