தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் ஸ்டாம்ப் பத்திரத்தை நீட்டிய மாப்பிள்ளை பிரெண்ட்ஸ்! பரபரப்பு
மதுரை: மதுரை உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பின்னும் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து வைத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவயது முதல் நண்பர்களாக இருப்போரும் திருமணம் என்று ஆனால் பிரியும் சூழல் வருகிறது. இதற்கு காரணம் அந்த நபர் குடும்பஸ்தன் ஆகிவிட்டார். அடுத்த ஆண்டில் அப்பாவாகிவிடுவார்.
எனவே குடும்ப பொறுப்புகள் அதிகம். திருமணத்திற்கு முன்னர் ஜாலியாக செலவு செய்து கொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்றியிருக்கலாம். ஆனால் திருமணம் ஆகிவிட்டால் பொறுப்பு, கடமை வருகிறது. இதனால பெரும்பாலானோர் திருமணம் என ஆகிவிட்டால் நண்பர்களும் எப்போதும் போல் பழக நேரம் கிடைப்பதில்லை

கிரிக்கெட் விளையாட்டு
இதில் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது, நீச்சல் அடிப்பது, கபடி விளையாடுவது என்றால் ஒரு நண்பர் இல்லை என்றால் கூட விளையாடுவதற்கு நன்றாக இருக்காது. என்னதான் கல்யாணம் ஆனாலும் நான் உங்களை பாரக்காமலும் விளையாடாமலும் இருக்க மாட்டேன் என சத்தியம் செய்யும் நபர்கள் கூட பிறகு சத்தியத்தை மீறும் நிலை ஏற்படுகிறது.

மணப்பெண்
இதற்கு காரணம் அந்த மணப்பெண்ணாக கூட இருக்கலாம். அதாவது திருமணம் ஆனதும் பெண் வீட்டில் சில அறிவுரைகளை சொல்லி அனுப்புவார்கள். அதில் முககியமானது, "மாப்பிள்ளையை பிரென்ட்ஸ் செட்டோட சேர விடாதே" என்பதுதான். நண்பர்களுக்கு என நேரம் ஒதுக்கிவிட்டால் மனைவியுடன் நேரத்தை செலவிடமாட்டாரோ என்ற சந்தேகம்.

நண்பர்கள்
இன்னொரு நண்பர்களுடன் சேர்ந்து எங்கே மாப்பிள்ளை கெட்டு போயிடுவாரோ என்ற பயமும் இவர்களுக்கு உண்டு. அதனால்தான் பெண்ணிடம் இது போன்ற அறிவுரைகளை கூறி அனுப்புகிறார்கள். ஆனால் மதுரை உசிலம்பட்டியில் மாப்பிள்ளையைவிட அவரது நண்பர்கள் விவரமானவர்கள் போல!

கிரிக்கெட் விளையாட அனுமதி
திருமணத்திற்கு பின்னும் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். அந்த ரூ 20 ஸ்டாம்ப் பத்திரத்தில் சம்மதபத்திரம் என தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் திருமதி பூஜா எனும் நான் சூப்பர் ஸ்டார் அணியின் கேப்டனும் எனது கணவருமான ஹரிபிரசாத்தை இன்று முதல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர் ஸ்டார் அணிக்கு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறேன். இப்படிக்கு பூஜா என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மணப்பெண் பூஜா என கையெழுத்திட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications