மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டோவை பார்த்ததும் டென்ஷன் ஆன நீதிபதிகள்.. ‘மனித கழிவை மனிதனே அள்ளூவதா?’ கலெக்டர்களுக்கு வார்னிங்!

Google Oneindia Tamil News

மதுரை : மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதக் கழிவை அள்ள மனிதர்களையே பயன்படுத்துவதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்திருந்தபோது, மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டவை எனக் கேட்ட நீதிபதிகள், குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அந்த மாவட்ட ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தனர்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது எனக் கடுமையாகத் தெரிவித்த நீதிபதிகள், தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 3 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

என்று தீரும் இந்தக் கொடுமை?

என்று தீரும் இந்தக் கொடுமை?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்கள் பலமுறை கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தும் கூட, இன்னும் பல இடங்களில் மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களையே ஈடுபடுத்தும் கொடுமை தொடர்ந்து வருகிறது. சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளின்போது பலர் விஷவாயு தாக்கப்பட்டு பலியாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

இன்னும் தொடர்கின்றன

இன்னும் தொடர்கின்றன


இந்நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவில் துப்புரவாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது. பாதாள சாக்கடைகளில் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சமயங்களில் விஷவாயு தாக்கி, அவர்கள் பரிதாபமாக இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன.

2013 மறுவாழ்வுச் சட்டம்

2013 மறுவாழ்வுச் சட்டம்

துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கையால் மலம் அள்ளுவது முழுவதுமாக தடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.

ரோபோக்களை பயன்படுத்த வேண்டும்

ரோபோக்களை பயன்படுத்த வேண்டும்

மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதாள சாக்கடைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது தடுக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தவும், துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்

அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பாதாள சாக்கடைகளில் இறங்கி தொழிலாளர்கள் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இவை எங்கே எடுக்கப்பட்டவை என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்டவை என தெரிவித்தார்.

கலெக்டர்களுக்கு எச்சரிக்கை

கலெக்டர்களுக்கு எச்சரிக்கை

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர். மேலும் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

English summary
Madurai High court bench has warned District Collectors will be suspended if they use humans to remove human waste. Judges strongly condemned Manual scavenging.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X