மதுரை ஜல்லிக்கட்டு.. துள்ளி வரும் காளைகள் அடக்கும் மாடு பிடி வீரர்களே.. ஆன்லைனில் முன்பதிவு அவசியம்
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ள நிலையில் வீரர்களுக்கு முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் பண்பாடு சார்ந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழகம் நெடுகிலும் நடத்தப்பட்ட கடும் போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது.

இருப்பினும், ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், அதனை மாநில அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தொடர்ந்து, பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையிலும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி,மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும் என்று கூறினார்.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பலரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பித்துவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதற்காகவே ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. எனவே, அதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. காப்பீடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போட்டிகளை நடத்துபவர்களை காப்பீடும் செய்கின்றனர். வரும் காலங்களில் போட்டி நடத்தவதற்காக விழா அமைப்பாளர்கள் காப்பீடு செய்வதைப் போல, போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications