ஏ நானும் ரவுடிதான்.. "அரெஸ்ட் மீ".. காவல் நிலையத்தில் அடம்பிடித்த இளைஞர்! நம்ம "ப்ளோரிடா"மதுரையில்!
மதுரை: தன்னை குடும்பத்தினர் யாரும் மதிக்காததால் விரக்தி அடைந்த இளைஞர் ஒருவர், தன்னை ஜெயிலில் அடைக்கக் கோரி காவல் நிலையத்துக்கு சென்று அடம்பிடித்த சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.
ஜெயிலுக்கு போனால்தான் தன்னை கெத்து என அனைவரும் நினைப்பார்கள் என்றும், அதனால் உடனே தன்னை கைது செய்யுமாறும் அந்த இளைஞர் போதையில் செய்த ரகளையால் காவல் நிலையமே சிறிது நேரம் ரணகளமானது.
சமீபகாலமாக, மதுரையில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதால் ஏற்கனவே கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் போலீஸார், இந்த இளைஞர் செய்த சேட்டையால் நொந்து நூடுல்ஸாகியுள்ளனர்.

'தலைநகரம்' வடிவேலு பாணியில்..
மதுரை மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, மதுரையில் உள்ள இரண்டு மகளிர் கல்லூரிகளுக்குள் புகுந்த போதை இளைஞர்கள், அங்கு பெரும் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதில் ஒரு சம்பவத்தில், மாணவி ஒருவரின் தந்தை மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து, மதுரையில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இதுபோன்ற செயல்களை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸாரின் நிலைமை இவ்வாறு இருக்க, 'தலைநகரம்' வடிவேலு பாணியில் இளைஞர் ஒருவர் சேட்டை செய்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிக்காத குடும்பத்தினர்..
மதுரை வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லக்குறும்பன் (26). 12-ம் வகுப்பு வரை படித்த இவர், அதற்கு பின்னர் மேல்படிப்பு எதுவும் படிக்காமலும், வேலைக்கு செல்லாமலும் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனிடையே, சிறிது நாட்களாக அவரது குடும்பத்தில் அண்ணன், தம்பி உட்பட யாரும் நல்லக்குறும்பனை மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் முன்னிலையில் தான் ஒரு கெத்தான ஆள் என நிரூபிக்க ஆசைப்பட்டார் நல்லக்குறும்பன். இதற்காக அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து தன்னை ஒரு பெரிய ஆளாக காட்ட முதலில் அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், வம்பிழுத்து அவர் அடி வாங்கியதுதான் மிச்சமாகி போனது.

அரெஸ்ட் ப்ளீஸ்..
இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த நல்லக்குறும்பன், எப்பாடு பட்டாவது ஜெயிலுக்கு போய்விட்டால் தன் மீது குடும்பத்தினருக்கு மரியாதையும், பயமும் வரும் என முடிவு செய்தார். அதன்படி, இன்று காலையிலேயே ஃபுல் பாட்டில் மது அருந்திய அவர், நேராக செக்காணூரனி காவல் நிலையத்துக்கு சென்ற அவர், தான் அங்கு வந்த நோக்கத்தை கூறினார். ஏற்கனவே பல கடுப்புகளில் இருந்த போலீஸார், நல்லக்குறும்பனை பார்த்து, "இங்கிருந்து போய்ரு அது உனக்கு ரொம்ப நல்லது" வார்னிங் செய்தனர்.

சாலையில் புரண்டு அடம்..
ஆனால், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த நல்லக்குறும்பன், இப்போ நீ என்னைய கைது செய்தே ஆகணும் எனக் கூறி காவல் நிலையத்தில் பெரும் களோபரம் செய்தார். ஆனால் போலீஸார் அவரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் மட்ட மல்லாக்க படுத்து, தன்னை பிடித்து ஜெயிலில் போடுமாறு அடம்பிடித்தார். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கடுப்பான போலீஸார், நல்லக்குறும்பனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போதை இறங்கும் வரை அவரை 'சிறப்பாக' கவனித்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications