வெல்லம் ஒழுகுது..முந்திரி பருப்பு சின்னதா இருக்குனு சொல்வாங்க! அதான் ஆயிரமா கொடுக்கிறோம் - எ.வ.வேலு!
மதுரை : தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பொங்கல் பரிசில் கடந்த முறை போல் பொருட்கள் இல்லாததற்கு என்ன காரணம் என்ன என்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் எவ்வளவு பணம் தருவார்கள்? இலவச வேட்டி சேலையோடு, ரொக்கமாகவா அல்லது பொருளாகவா என்பது குறித்து தொடர்ந்து சிந்தித்து வந்தனர், அதற்கு தற்போது விடை கொடுத்திருக்கிறது தமிழக அரசு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதேபோல் திமுக பொறுப்பேற்றது வழங்கப்படுமென மக்கள் எதிர்பார்த்தனர்.

பொங்கல் தொகுப்பு
ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமற்றதாக இருந்ததாகவும், வெல்லம் போன்றவை உருகிய நிலையில் இருந்ததாகவும், ஒரு பரிசு தொகுப்பில் இருந்த வெல்லத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் தமிழக முதல்வரே களத்தில் இறங்கி சீரான விநியோகம் நடக்கிறதா என கண்காணிக்க வேண்டியதாயிற்று.

அமைச்சர் எ.வ.வேலு
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டுமெனவும், பரிசுத் தொகுப்பில் கரும்பு, பனை வெல்லம் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசில் கடந்த முறை போல் பொருட்கள் இல்லாததற்கு என்ன காரணம் என்ன என்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

விளக்கம்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கரும்பு கொடுத்தால் அரைக் கரும்பு கால் கரும்பு கொடுத்ததாக சொல்வார்கள். முந்திரி பருப்பு சிறியது, வெல்லம் உருகுகிறது என்றெல்லாம் புகார் சொல்வார்கள். சர்க்கரை பொங்கல் என்பதால் ஒரு கிலோ சர்க்கரையும் பச்சரிசியும் ஆயிரம் ரூபாயில் கரும்பு ஏலக்காய் என மக்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ள தமிழக முதல்வர் கூடுதலாக 1000 கொடுத்துள்ளார்" என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்











Click it and Unblock the Notifications