திமுகவை உதயநிதி நிர்வகிப்பார்.. 2 மாதத்தில் அமைச்சராகிறார்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு தகவல்
மதுரை: திமுகவை உதயநிதிதான் நிர்வகிக்க போகிறார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் மூர்த்தி. இவர் தமிழக வணிக வரித் துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்கிறார்.
அது போல் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் நேரில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

2 மாதங்களில் அமைச்சர் பதவி
அவர் கூறுகையில் திமுகவை உதயநிதி ஸ்டாலின்தான் நிர்வகிக்க போகிறார். இன்னும் 2 மாதங்களில் உதயநிதி அமைச்சராக போகிறார். முதல்வர் ஸ்டாலினை போலவே உதயநிதி ஸ்டாலினும் சிறுவயதிலிருந்து கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைக்கிறார். நேரு, இந்திரா காந்தி முதல் ஜெயக்குமார், ஓபிஎஸ் வரை வாரிசு அரசியல் இருக்கிறது என்றார்.

பாராட்டத்தக்கது
இவர் ஏற்கெனவே ஒரு முறை உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் திமுக வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் உதயநிதி. அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவரது பணி அமைச்சராக தமிழகம் முழுவதும் தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றனர். அது போல் அமைச்சர் கே என் நேருவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சேகர் பாபுவும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் பதவி வேண்டாம்
அப்போது பேசிய உதயநிதி, நான் பதவி மீது எப்போதும் ஆசை வைத்ததில்லை. எனக்கு வேண்டாம். நான் எப்போதும் மக்களுக்கு சேவை புரியவே விரும்புகிறேன். மக்களுக்கும் முதல்வருக்கும் பாலமாக இருந்து நன்மை செய்ய விரும்புகிறேன் என்றார். உதயநிதி வேண்டாம் என்றாலும் அமைச்சர் பதவி அவரை விடாமல் துரத்தி கொண்டே இருந்தது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்?












Click it and Unblock the Notifications