17 வயசுதான் ஆகிறது இந்த பையனுக்கு.. 2 நாட்களாக 14 வயது சிறுமியை.. அதிர்ந்து போன மதுரை!

14 வயது சிறுமியை அடைத்து வைத்த தாயும், மகனும் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 14 வயது சிறுமியை தன் வீட்டுக்குள்ளேயே ரூமில் அடைத்து வைத்து 2 நாட்கள் நாசம் செய்துள்ளார் 17 வயது சிறுவன்.. இதற்கு அந்த சிறுவனின் அம்மாவும் உடந்தையாம்.. மதுரை மாநகரில் நடந்துள்ளது இந்த அக்கிரமம்!

மதுரையில் உள்ள சக்கிமங்கலம் சவ்ராஸ்ட்ரா பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்... அவரது மனைவி பகவதி. இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார்.. இந்த மகனுக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் மீது காதல்.. அந்த பெண்ணுக்கு வெறும் 14 வயசுதான்!

 Mother and son arrested for abusing 14 year old girl in Madurai

ஆனால், காதலை அந்த சிறுமி ஏற்கவில்லை.. விடாமல் லவ் டார்ச்சர் தந்தும், சிறுமி மறுப்பு தெரிவித்து வந்ததாகவே தெரிகிறது. இதனால் அந்த சிறுவன் டென்ஷன் ஆகிவிட்டார்.. எப்படியாவது ஒருநாள் வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று காத்திருந்தார்.

ஒருநாள் கல்மேட்டில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டிற்கு சிறுமி சென்று கொண்டிருந்தார்.. அப்போது திடீரென அவரை டூவீலரில் வந்து வழிமறித்தது யார் என்று பார்த்தால் சிறுவனும், அவனது அம்மாவும்.

2 பேரும் சேர்ந்து சிறுமியை தரதரவென தங்கள் வீட்டுக்கு இழுத்து வந்தனர்.. ஒரு ரூமில் அடைத்து வைத்தனர்.. அடிக்கடி அந்த ரூமுக்குள் சென்ற பகவதி, தன் பையனை கல்யாணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.. அப்போதும் சிறுமி மறுக்கவும், கோபமடைந்த பகவதி சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார்.

இதற்கு பிறகு, மகன் அந்த ரூமுக்குள் போவாராம்.. சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.. இதை பகவதி எதுவுமே கேட்கவில்லை.. இப்படியே 2 நாட்கள் சிறுமியை ரூமுக்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இந்த விஷயம் சிறுமியின் அப்பாவுக்கு தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக சிலைமான் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.. தாயும் - மகனும் இப்போது விசாரணையின் பிடியில் உள்ளனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+