எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளை அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.. மதுரை நிகழ்ச்சி நிரல் இதுதான்
Recommended Video

மதுரை: பிரதமர் நரேந்திர மோடி நாளை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த ஒரு பார்வை இதோ:
விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை விமான நிலையம் வருகிறார். காலை 11.20 மணிக்கு மதுரை வருகிறார் மோடி. அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
இதையடுத்து, காரில் வருகை தந்து, விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் பகுதியில் நடைபெறும் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார் மோடி.

முக்கிய பிரமுகர்கள்
பகல் 12 மணி வரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

பாஜக ஆலோசனை
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதும், பகல் 12.05 மணிக்கு பாஜக மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். மொத்தம் 10 நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் நடுவே, தேர்தல் வியூகம் குறித்து மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி 12.55 மணி வரை நடக்கிறது. பின்னர் விமான நிலையம் வரும் மோடி சிறப்பு விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார்.

ஒன்றரை மணி நேரம்
ஆக மொத்தம் சுமார் ஒன்றரை மணி நேரங்கள் தமிழகத்தில் பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். மோடி பங்கேற்கும் 2 நிகழ்ச்சிக்கும் அருகருகே மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நிறைவடையும் வரை ஒன்றரை மணி நேரமும் அப்பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை புறப்படும் முதல்வர்
பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவே மதுரை செல்கிறார். மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications