மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை கொடி" காட்டிய பிடிஆர்.. காதை கிழித்த விசில் சத்தம்.. திமிறிய காளைகள்.. திணறிய பாலமேடு

இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்க போகிறது

Google Oneindia Tamil News

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை அருகே உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.. இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. இப்போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Recommended Video

    Palamedu Jallikattu: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.

    பொங்கல் திருநாளையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிகட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.. வெகு விமரிசையாக நடந்த இந்த போட்டிகளில் ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்..

    அதேபோல, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டிகள் நடத்தப்பட்டன.. இதில், வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கி காட்டினர்..

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்... சிறந்த காளைக்கு கார் பரிசளிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்... சிறந்த காளைக்கு கார் பரிசளிக்கும் முதல்வர் ஸ்டாலின்

    போட்டிகள்

    போட்டிகள்

    இறுதியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும் மிக்சி, கிரைண்டர், தங்க காசுகள் போன்ற பரிசுகளை வென்றனர் காலையில் ஆரம்பமான இந்த ஜல்லிக்கட்டு போட்டி, நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.. மொத்தமாக, 7 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் முதல் பரிசை தட்டி சென்றார்.. இவர் அவனியாபுரத்தை சேர்ந்தவர்.. வெற்றி பெற்ற கார்த்திக்குக்கு முதல்வர் சார்பில் டேட்சன் கார் பரிசாக வழங்கப்பட்டது...

    பாலமேடு

    பாலமேடு

    அதேபோல, 19 காளைகளை அடக்கிய வளையங்குளம் முருகனுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பைக்கும், 12 காளைகளை அடக்கிய விளாங்குடி பாரத்குமாருக்கு ஒரு பசுங்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. தேவசகாயம் என்பவரின் காளை முதல் பரிசான பைக்கை வென்றார்.. இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை அருகே உள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.. மஞ்சமலை ஆற்றுதிடலில்தான் இந்த போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இப்போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

     ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    மாலை 4 மணி வரை நடக்கும் இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.. ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு கலர் யூனிபார்ம் அணிந்து வந்து விளையாடி வருகிறார்கள்.. மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த காளைகள் இன்றைய ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டுள்ளனர்.. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் உடல் நிலை குறித்து டெஸ்ட்டுகளை செய்ய டாக்டர்கள் குழுவினர் களத்தில் தயாராக உள்ளனர்.

    கார்

    கார்

    அதேபோல பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மதுரை எஸ்பி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்... அதேபோல, போட்டியின் போது காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை தரவும், மருத்துவ குழு தயார் நிலையில் இருக்கிறது.. இப்போது நடந்து வரும் போட்டியிலும் சிறந்த காளைக்கு கன்றுடன் பசுவும், சிறந்த வீரருக்கு காரும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும், வாட்ச், பீரோ, பைக் போன்ற பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

     திருவெறும்பூர்

    திருவெறும்பூர்

    அதேபோல, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் கிராமத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கி நடந்து வருகிறது.. இந்த போட்டியில் அதிகபட்சமாக 400 மாடுகள் பங்கு பெறம்,300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.. மேலும் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இந்தநிகழ்ச்சியை காண அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மட்டும் குவிந்துள்ளனர். அதுவும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.. மெடிக்கல் டீமும் தயார் நிலையில் உள்ளனர்.

    English summary
    Palamedu Jallikattu ( பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி): உலகப்புகழ் பெற்ற மதுரை அருகே உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X