மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு..கோவை, ஈரோட்டை தொடர்ந்து பதற்றம்
மதுரை : கோவை, ஈரோட்டை தொடர்ந்து இன்று இரவு மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கோவையில் பெட்ரோல் குண்டு முதல் முதலாக சித்தாபுதூரில் உள்ள மாநகர பாஜக அலுவலகம் மீது வீசப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிக்கவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து கோவையின் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

கோவையில் துவங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு
அதாவது கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தை தொடர்ந்து கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாக்கெட் பெட்ரோல் வீசப்பட்டு வாகனங்களுக்கும் தீவைக்க முயற்சி செய்யப்பட்டது. அதன்பிறகு நேற்று இரவு கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரின் வீட்டிலும் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

ஈரோடு-சென்னை
மேலும் ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதன்பிறகு நேற்று இரவு சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். நேற்றிரவு இவரது வீட்டின் வாசலில் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் சீதாராமன் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் பெட்ரொல் குண்டு வீசியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மதுரையில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
இதன் தொடர்ச்சியாக இன்று இரவு மதுரையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் அனுமந்தையர் மகன் கிருஷ்ணன் (வயது 55). இவர் கம்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழில் செய்து வருகிறார் ஆர் எஸ் எஸ் அமைப்பில் அனுப்பானடி மண்டல் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இரவு 7.40 மணியளவில் 2 பேர் கொண்ட கும்பல் டூ வீலரில் வந்து 3 பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டில் வீசியதில் சரக்கு வாகத்தின் மேல் விழுந்து ஒன்றும். மற்றென்று வெளியே விழுந்து வெடித்தது. இதில் வெடிக்காக மற்றொரு பெட்ரோல் குண்டு ஒன்று கார்ஷெட்டின் உள்ளே விழுந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவு
சம்பஇடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆணையர் சீனிவாச பெருமால் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு அருகில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் இன்று இரவு வீட்டு முன்பு வந்த மர்மநபர் வீட்டு உள்ளே பெட்ரோல் குண்டு வீசினார். அதன்பிறகு அந்த வழியாக வந்தவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பெட்ரோல் குண்டு வீசிய நபர் அங்கிருந்து செல்கிறார். இதுதொடர்பாக கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆலோசனைக்கு மத்தியில்...
கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாஜக அலுவலகம், பிரமுகர்கள் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வீடு அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு நிலையில்சட்ட ஒழுங்கு தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு தலைபமையில் இன்று ஆலோசனை நடந்தது. டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி தேவாசீர்வாதம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்நிலையில் தான் தற்போது மதுரையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications