ராணுவத்தை பலவீனப்படுத்தி, இளைஞர்கள் வாழ்வில் விளையாடும் மோடி.. அக்னிபாத்தை விளாசிய காங்கிரஸ்
மதுரை: ‛‛அக்னிபாத் திட்டம் என்பது இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும். இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் இத்திட்டம் மூலம் பிரதமர் மோடி அரசு இளைஞர்கள் வாழ்வில் விளையாடுகிறது'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.
Recommended Video
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம், சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மதுரை திருப்பரங்குன்றம் பதினாறாம் கால் மண்டபம் அருகே அக்னிபாத் திட்டத்தை கண்டித்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பங்கேற்றார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்துக்கு குந்தகம்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறோம். அக்னிபாத் திட்டம் என்பது இந்திய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வரப்போகிறது. இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் திட்டமாகவும், ராணுவத்தின் செயல்திறனை குறைக்கும் திட்டமாகவும் இருக்க போகிறது. இது குறித்து ஜனாதிபதியிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி கையொப்பமிட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர்.

இளைஞர்கள் வாழ்வில் விளையாடுகிறது
இந்தத் திட்டம் மூலம் வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக கூறிய மோடி அரசு எந்த செயலும் செய்யாமல் வெறும் ஏமாற்று வேலையை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் வாழ்வில் மோடி அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

அரசியலில் தரம் குறைந்து வருகிறது
அதிமுக கட்சியில் நடப்பதை பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் கவலைப்படுவது இல்லை. அரசியலில் தரம் குறைந்து வருகிறது. அரசியலில் மிகவும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் எப்போதும் கடைபிடிக்கும்.

ஏமாற்றியது போதும்
மதுரை விமான நிலையத்தை பகல் நேர விமான நிலையமாக மட்டுமே செயல்படுத்தும் மோடி அரசை கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தோம். மத்திய விமானத்துறை அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அவரிடம் வலியுறுத்தினோம். கொரோனாவை காரணமாக காட்டி ஏமாற்றியது போதும்.

மீண்டும் எழுப்புவேன்
இரவுநேர சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்றால் மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் வேலைகளும் தாமதப்படுத்தி வருகின்றனர். இந்த குறைகள் அனைத்தும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் எழுப்புவேன் மீண்டும் மத்திய அமைச்சரை சந்திப்பேன் மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன்'' என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications