எடப்பாடியிடம் மட்டும் பேசிய பிரதமர்.. அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம்.. சொல்கிறார் ஆர்பி உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றபோது, எடப்பாடி பழனிச்சாமியிடம் மட்டுமே பிரதமர் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையம் வந்தபோது அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அருகருகே நின்று வரவேற்றது அதிமுக தொண்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதனால் விரைவில் ஒன்றுபட்ட அதிமுக உருவாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இருவரையும் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி மோடி சேர்த்து வைத்தாரோ, அதேபோல் மீண்டும் சேர்த்து வைப்பார் என்று பார்க்கப்பட்டது.

திமுக இரட்டை வேடம்

திமுக இரட்டை வேடம்

இந்த நிலையில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்வொன்றில் பங்கேற்று ஆதரவற்றோருக்கு போர்வைகளை ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

அனைத்து கட்சி கூட்டம்

அனைத்து கட்சி கூட்டம்

2006ல் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் இந்த சட்டத்திற்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. இப்போது, இந்த வழக்கு குறித்த வாதத்தில் நீதிமன்றத்தில் தோல்வியுற்ற பின்னர், அவர்கள் மூக்கறுபட்டதை மறைக்கும் பொருட்டே அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தை நடத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

பிரதமர் - இபிஎஸ் பேச்சு

பிரதமர் - இபிஎஸ் பேச்சு

தொடர்ந்து பிரதமரை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் இணைந்து சந்தித்தது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நேற்று மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். எடப்பாடியை பார்த்ததும் பிரதமரின் முகத்திலே மலர்ச்சி தெரிந்தது. எடப்பாடியிடம் How are you என பிரதமர் நலம் விசாரித்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி I'm fine என்று பதிளிலளித்தார்.

ஓபிஎஸ் உடன் பேசவில்லை

ஓபிஎஸ் உடன் பேசவில்லை

எடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறு யாரிடமும் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை. விமான நிலையத்தில் பிரதமர் பேசிய ஒரேயொருவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். இது அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம். பிரதமர் நலம் விசாரித்தது அதிமுகவுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல் அடுத்தடுத்து நின்றிருந்தாலும் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+