மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தச்சு கொடுப்பது இவங்க.. கடிச்சு வைக்கறது இவரு.. மாஸ்க் பத்தி கேட்ட கேள்விக்கு.. பிடிஆர் மாஸ் பதில்!

Google Oneindia Tamil News

மதுரை: ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங், வேக்சினுக்கு நிதியை யார் வழங்குவது என்பது குறித்த கேள்விகளுக்குத்தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளுத்து வாங்குகிறார் என்றால் இவர் எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்பார் என்பதை நிரூபித்துள்ளார்.

நிதியமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்துதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. கோவாவில் கூட இவர் யார் என இணையதளத்தில் தேடி வருவதாக செய்திகள் வருகின்றன.

மத்திய நிதியமைச்சர்

மத்திய நிதியமைச்சர்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வைத்த கேள்விகள் இதுவரை எந்த நிதியமைச்சரும் முன்வைக்காத கேள்விகள் என்கிறார்கள். பாஜகவினரை தனது துடுக்கான பதில்களால் கதறவிடுகிறார்.

நெட்டிசன்

நெட்டிசன்

இப்படிப்பட்டவரையே கதற விட என்ன செய்வது என யோசித்த நெட்டிசன் ஒருவர் PTR SIR மாஸ்க் எங்க வாங்குறாருன்னு தெரிஞ்சா நாமலும் நாலு வாங்கிக் கொள்ளலாம் என கேட்டுள்ளார். பொருளாதாரம் மட்டும் எந்த கேள்வி கேட்டாலும் அசரமாட்டேன் என்ற வகையில் பிடிஆரும் பதில் அளித்துள்ளார்.

பிடிஆர்

பிடிஆர்


இதுகுறித்து டிவிட்டரில் பிடிஆர் பதிலளிக்கையில் எல்லாமே ஹோம்மேட்தான். சில வீட்டில் ஆல்ட்ரேஷனும் செய்வோம். அவர் யூஸ் செய்யும் மாஸ்க்கை தி ஆர்ட் என போட்டு அவருடைய மனைவியின் புகைப்படத்தை போட்டு அதில் ஆர்டிஸ்ட் என போட்டுள்ளார். அது போல் ஆல்ட்ரேஷன் என்று பதிவிட்டு கிழிந்த மாஸ்க்கையும் எடிட்டர் னு போட்டு அவர் வீட்டு நாயின் புகைப்படத்தையும் போட்டுள்ளார்.

எடிட்டர்

எடிட்டர்

ஆர்ட் என்பது மாஸ்க், அதை தைத்து தருபவர் அவருடைய மனைவி. அந்த மாஸ்க்கை கடித்து குதறி கிழிப்பது அவரது வீட்டு செல்லபிராணி என்ற அர்த்தத்தில் பிடிஆர் ட்வீட் போட்டுள்ளார். இவரது இந்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
Finance Minister PTR Palanivel Thiyagarajan says about his home made mask.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X