சாத்தான்குளம் ஜெயராஜ்- பெனிக்ஸ் கொலை வழக்கு! 9 போலீஸாருக்கும் ஏப்.2-க்கு தண்டனை ஒத்திவைப்பு
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீஸாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்றைய தினம் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க இருந்த நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ். இருவரும் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது கடையை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சற்று கூடுதலாக திறந்து வைத்ததாக கூறி போலீஸார் தந்தை- மகனை கஸ்டடிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு போலீஸார் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதில் இருவரும் மரணமடைந்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இந்த மரணத்திற்கு நீதி கேட்டு பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தனர்.
ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து, சார்பு ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பால்துரை ஏற்கெனவே உடல்நல பிரச்சனையால் இறந்துவிட்டார். மீதியுள்ள 9 பேரும் இந்த வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
தனது தீர்ப்பில், காவல் துறையினரால் தாக்கப்பட்டதாலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர். போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். இது போன்ற துன்புறுத்தல்கள் செய்யப்பட்டது எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான். அது மட்டுமல்லாமல் நாம் அடித்து பழக தந்தையும் மகனும் சிக்கிவிட்டார்கள் என அந்த காவலர்கள் பேசிக் கொண்டே அடித்ததாக நேரில் பார்த்த சாட்சியம் தெரிவித்திருந்தது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் அவர்கள் அணிந்திருந்த ரத்த கறை படிந்த ஆடை முக்கிய ஆதாரமாக கிடைத்ததாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த 9 போலீஸாருக்கும் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு கடுமையான உச்சபட்ச தண்டனை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இன்றைய தினம் அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு அந்த 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அந்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்து தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications