பற்றிய "நெருப்பு".. சைக்கிள் கேப்பில் சைஸாக வரும் தலைவர்.. "இது ரொம்ப லேட்"ங்க.. செம கடுப்பில் திமுக
மதுரை: "அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு ரொம்ப தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் போன்றவையெல்லாம் நடந்திருக்காது" என்று மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படுபவர்களின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையிலேயே ரெய்டு நடத்த துவங்கினர்.

சென்னை, கரூர், கோவை உட்பட பல இடங்களில் சோதனை ஆரம்பமானது.. இதில் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை சூழ்ந்து, முடக்கி அவர்களின் வாகனத்தை சேதப்படுத்திய விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானது.
அதிரடி சோதனை:
இதனிடையே, செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, "என்னுடைய வீட்டில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. சோதனைகளை எதிர்கொள்வது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. என்னுடைய சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது.. அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
ரொம்ப லேட்:
எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும்.. வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்... குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை. இருக்கின்ற சொத்துக்களே போதுமானது, புதிய சொத்துக்கள் தேவையில்லை... சோதனைக்கு பிறகு தவறை சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்து கொள்ளவும் தயார்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசும்போது, "அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு ரொம்ப தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் போன்றவையெல்லாம் நடந்திருக்காது... சோதனைக்கு வந்த ஐடி அதிகாரிகளை தாக்குவதன் மூலம் திமுக வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது.
வெளிநாடு பயணம்:
முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம், இன்ப சுற்றுலா போல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்ஜிஆர் போல, விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. திமுக ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு கிடையாது.
காவல்துறை, டிஜிபி-யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. அவருடைய கைகள் கட்டப்பட்டுள்ளன.. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.
செங்கோல்:
புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் திமுக பங்கேற்க வேண்டும்... செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத திமுக, இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்" என்று தெரிவித்துள்ளார்... இப்படித்தர்ன, கடந்த 4 நாட்களுக்கு முன்பும் செல்லூர் ராஜு, செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்திருந்தார்..
"வரலாறு காணாத அளவிற்கு கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் துணைப் போயிருக்கிறார்கள்.. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் அறிவிக்கிறார் முதல்வர்.. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை போய் நேரில் சந்திக்கிறார். ஆனால், மதுரை சித்திரை திருவிழாவில் இறந்து போனவர்களுக்கு எந்த நலத்திட்டங்களும் அறிவிக்கவில்லை. கள்ளச்சாராயத்தை வித்தவருக்கு 50,000 பணம் கொடுத்து இருக்கிறார் என்று காரி துப்புகிறார்கள்.

கப்பம் அதிகாரி:
மதுவிலக்கு துறை அமைச்சரின் செயல்கள் தான்தோன்றித்தனமாக தான் உள்ளது. குவாட்டருக்கு 10 ரூபாயும், ஆப்க்கு 15 ரூபாயும் வாங்குகிறார்கள், யாரு அதிகாரிகள் கப்பம் கட்டாதவர்கள் தூக்கி அடிக்கப்படுகிறார்கள்" என்றெல்லாம் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications