தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம்.. குண்டுகள் முழங்காமல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) நேற்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். சாலமன் பாப்பையா உடல் இன்று அரசு மரியாதையுடன் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

Solomon pappaiah madurai

எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தனது 90-ஆவது வயதில் நேற்று காலமானார்.

உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள ஞானஒளிவுபுரம் பகுதியில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வசித்த இல்லத்தில் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. மதுரை​யில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், பொது​மக்​கள், திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

சாலமன் பாப்பையாவின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவரது உடலை சுமந்து வந்த வாகனத்துக்கு பொதுமக்கள் வழிநெடுக அஞ்சலி செலுத்தினர். மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட எஸ்.பி ராஜேந்திரன்ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

த னது உடலை தகனம் செய்ய வேண்மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, டும் என சாலமன் பாப்பையா உறவினர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும், அவர் சொன்னபடியே உறவினர்கள் செய்துள்ளனர். இறுதிச் சடங்கில் துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவுக்கு கௌரவ மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலமன் பாப்பையா உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக சாலமன் பாப்பையா மறைவு குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+