அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு! தர்மம் -தானம் என்று யாரும் நினைக்காதீர்! முதல்வர் உருக்கம்!
மதுரை: அரசுத் தொடக்கப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவை தர்மம் என்றோ, தானம் என்றோ, இலவசம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதில் ஒரு அரசினுடைய கடமையும், பொறுப்பும் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
காலை உணவுத் திட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்திருக்கிறார். மேலும், தனது கனவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

உருக்கமான வேண்டுகோள்
''காலை உணவுத் திட்டத்தை இலவசம் என்றோ, தர்மம் என்றோ, தானம் என்றோ, சலுகை என்றோ யாரும் நினைக்கக் கூடாது. இது ஒரு அரசினுடைய கடமையும், பொறுப்புமாக அமைந்திருக்கிறது. அத்தகைய கடமை உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும்தான் இந்தத் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அன்புள்ள மாணவச் செல்வங்களே! உங்களுக்கு காலையும் மதியமும் உணவு வழங்குகிறோம். எனவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள். இது ஒன்றுதான் என்னுடைய வேண்டுகோள். ''

போராடி பெற்ற உரிமை
''கல்வி நாம் போராடி பெற்ற உரிமை! படிப்பு ஒன்றுதான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து! அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகள், மற்ற தேவைகளை நிறைவு செய்யத்தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. நான் இருக்கிறேன். நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.''

படிப்பு தான் முக்கியம்
''படித்துத்தான் ஆக வேண்டுமா? படிக்காமல் முன்னேறியவர்களை எடுத்துக்காட்டாக காட்டுகிறோம்...குறிப்பாக இந்தப் படிப்பைத்தான் படிக்க வேண்டுமா?வேறு படிப்பே இல்லையா?..என்று யாராவது சொன்னால், அவர்களை முட்டாள்களாகப் பாருங்கள்! நீங்கள் படித்து அறிவார்ந்த சமூகமாக முன்னேற இருப்பவர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிச் சென்று விடாதீர்கள். விலகிச் செல்லவும் நான் விட மாட்டேன்.''

மனம் நிறைந்தது
''பிள்ளைகள் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிடும்போது அடையும் மகிழ்ச்சியை அவர்களது முகங்களில் நான் பார்த்தேன். அந்த தருணத்தில், நான் அடைந்த மகிழ்ச்சியைச் சொற்களால் வர்ணிக்கவே முடியாது. அவர்கள் சாப்பிடும்போது அதைப் பார்த்தேன். என்னுடைய மனம் நிறைந்தது. என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள்-ஒடுக்கப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகள்- எதன் காரணமாகவும் பள்ளிக்குச் செல்வது தடைப்படக் கூடாது.''
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications