மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டி.. அகில இந்திய அரசியலுக்கு திமுக முயல்கிறது!" ஜி.கே.வாசன் சாடல்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமாக தலைவர் ஜி.கே.வாசன், பல்வேறு விவகாரங்களில் திமுகவை கடுமையாகத் தாக்கி பேசினார்.

Recommended Video

    எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டி.. அகில இந்திய அரசியலுக்கு திமுக முயல்கிறது! ஜி.கே.வாசன் சாடல்

    மதுரையில் காமராசர் சாலையில் செயல்பட்ட தமாகா மாநகர மாவட்ட அலுவலகம் இப்போது பைபாஸ் ரோடு குரு தியேட்டர் அருகே மாற்றப்பட்டது.

    இந்த அலுவலகத்தை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திறந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுகவை கடுமையாகச் சாடினார்.

    அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா..? ப.சிதம்பரத்துக்கு எதிராக வரிந்து கட்டி வந்த ஜிகே வாசன்! அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா..? ப.சிதம்பரத்துக்கு எதிராக வரிந்து கட்டி வந்த ஜிகே வாசன்!

     எதிர்க்கட்சி அதிமுக

    எதிர்க்கட்சி அதிமுக

    இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தமாக தலையிடாது.. கூட்டணியில் இருப்பதால் நான் கருத்து கூற விரும்பவில்லை.. அதிமுக தமிழகத்தில் மிகப் பலமான கட்சி, அதிமுக தமிழகத்தில் சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக மேலும் வளர வேண்டும்.

     மக்களுக்குப் போராடும் பாஜக

    மக்களுக்குப் போராடும் பாஜக

    பாஜக மக்களுக்காகப் போராடி வருகிறது, அதிமுகவுடன் பாஜக ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருகிறது, ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலத்தை நிரூபிக்க பணிகளைச் செய்து வருகிறது.. அதிமுகவை பாஜக பிரித்துவிட்டது என்று கூறுவது தமிழகத்தின் ஆளும் கட்சியின் பயத்தைக் காட்டுகிறது. 2024 தேர்தலை முன்னிட்டு தமிழக கட்சிகளுக்கு இருக்கும் பயத்தை ஒட்டியே இப்படியான கருத்தைப் பரப்புகிறார்கள்.

     அதிமுக- பாஜக போட்டியில்லை

    அதிமுக- பாஜக போட்டியில்லை

    தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக தான் உள்ளது. இதை பாஜக ஏற்றுக்கொள்ளும். அதிமுகவுடன் ஒத்த கருத்துடன் செயல்படுவது தான் பாஜக... அதிமுக - பாஜகவுக்குள் எந்த போட்டியும் கிடையாது.. திமுக ஓராண்டு ஆட்சியில் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து உள்ளனர்.. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களைத் திசை திருப்பி வருகிறது..

     இந்திய அரசியல்

    இந்திய அரசியல்

    வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டி, அகில இந்திய அரசியலுக்கு திமுக முயல்கிறது. பிரச்சினைகளைத் திசை திருப்புகிறது. ஓராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஆளுங்கட்சிக்கு எதிராக அடுக்கலாம். பாஜக பற்றிய பேசும் திமுக, காங்கிரஸ் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில்லை.

     சட்ட ஒழுங்கு

    சட்ட ஒழுங்கு

    சொத்துவரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகளுக்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கை திமுக தலைமையிலான அரசு நிலை நாட்ட வேண்டும்.. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. போதை ஒழிப்பைத் தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்.

     24 மணி நேரத்தில் தண்டனை

    24 மணி நேரத்தில் தண்டனை

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பாலியல் வழக்குகளில் குற்றவாளி உறுதியான 24 மணி நேரத்தில் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்" எனக் கூறினார்

    English summary
    Tamil Manila Congress chief GK Vasan slams DMK: (தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர் சந்திப்பு) GK Vasan about oppsition parties admk and bjp.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X