மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'எங்கள் எய்ம்ஸ் எங்கே' மதுரையில் அதிர்ந்த முழக்கம்! ஒற்றை செங்கலுடன் போராட வந்த கம்யூனிஸ்ட்கள்!

Google Oneindia Tamil News

மதுரை: 'எங்கள் எய்ம்ஸ் எங்கே' என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த கம்யூனிஸ்ட்கள் ஆளுக்கு ஒரு ஒற்றைச் செங்கலை கையில் எடுத்து வந்திருந்து கவனம் ஈர்த்தனர்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்க வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. மாணவர்களால் பார்க்க முடியாத ஒரே கல்லூரி.. கொதிக்கும் சு.வெங்கடேசன்! மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. மாணவர்களால் பார்க்க முடியாத ஒரே கல்லூரி.. கொதிக்கும் சு.வெங்கடேசன்!

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சுமார் 2,000 பேர் திரளாக பங்கேற்றனர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒற்றை செங்கல்

ஒற்றை செங்கல்

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஒற்றை செங்கல் பிரச்சாரத்தின் மூலம் கவனம் ஈர்த்த அமைச்சர் உதயநிதியை போல், இந்தப் போராட்டத்திற்கு வந்திருந்தவர்களும் ஒற்றைச் செங்கலை கையில் எடுத்து வந்திருந்து கவனம் ஈர்த்தனர். மேலும், 'எங்கள் எய்ம்ஸ் எங்கே' என்ற முழக்கத்தை தொடர்ச்சியாக முன் வைத்து மத்திய அரசின் நிர்வாகமுறையை பற்றி கடுமையாக சாடினர். கடந்த 2018ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு முயற்சிகள்

பல்வேறு முயற்சிகள்

மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ 4 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் இதுவரை அங்கு எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் நடக்கவில்லை. இதனால் தான் போராட்டங்களை இனி தொடர்ச்சியாக நடத்துவது என முடிவெடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதற்கட்டமாக இன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியுள்ளது.

தீவிரப் போராட்டம்

தீவிரப் போராட்டம்

இனி உண்ணாவிரதம், பேரணி என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரம் காட்டத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் எய்ம்ஸ் விவகாரம் தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A huge protest has been held in Madurai on behalf of the Marxist Communist Party with the slogan 'Where is our AIIMS?'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X