தேவர் தங்க கவசம் யாருக்கு? கை விரித்த வங்கி.. இறுதி முடிவு யார் கையில்? 26ஆம் தேதி இருக்கு சம்பவம்!
மதுரை : முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி ஈபிஎஸ் தரப்பின் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளையில் காரசார வாதங்கள் நடைபெற்றன.
தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தரப்பிலும், வங்கி நிர்வாகம் தரப்பிலும் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கிறதோ அதைப் பின்பற்றத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், தேவர் தங்கக் கவசம் யார் கைக்குச் செல்லப் போகிறது என்பது மதுரை ஐகோர்ட்டின் முடிவில் தான் இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது
அதிமுகவில் ஏற்கனவே ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தற்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, அவருக்கு தங்க கவசம் அணிவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக இரு தரப்பும் மோதி வருகிறது. அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை தங்கள் தரப்புக்கு தரக் கோரி இரு தரப்பினரும் வங்கியில் கடிதம் அளித்துள்ளனர். இதனால், வங்கி நிர்வாகம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

சீனிவாசன் மனு
தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை தங்கள் தரப்பில் வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்த பின்னர் அதிக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

வரவு செலவு எல்லாம் எங்ககிட்ட
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தற்போது இடைக்கால கழக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேலும் அதிமுக தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அதில் கழகத்தின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அனைத்து வங்கி கணக்குகளிலும் தற்போது வரவு செலவுகளை செய்து வருகிறார். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது.

வாதங்கள்
அதனை பேங்க் ஆப் இந்தியா கிளையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு தங்களுக்கு அனுமதி கோரி வங்கி கிளையில் மனு செய்திருந்தோம். வங்கி மறுத்துவிட்டது. எனவே அதிமுக தரப்பில் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வசம் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் மற்றும் பழனி முன்னாள் எம்.எல்.ஏ வழக்கறிஞர் சுப்புரத்தினம் ஆகியோர் ஆஜராகி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தங்க கவசம் கொடுக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீதிமன்ற முடிவை ஏற்கிறோம்
மேலும் தங்கள் தரப்பையும் இந்த வழக்கில் மனுதாரராக இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தரப்பில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கிறதோ அதைப் பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல் வங்கி தரப்பில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு கட்டுப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணையை வருகின்ற 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

முடிவு கோர்ட் கையில்
முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தரப்பிலும், மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நிர்வாகம் தரப்பிலும் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கிறதோ அதைப் பின்பற்றத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால், தேவர் தங்கக் கவசம் யார் கைக்குச் செல்லப் போகிறது என்பது மதுரை ஐகோர்ட்டின் முடிவில் தான் இருக்கிறது. இதனால், இரு தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் 26ஆம் தேதி விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர்.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே!












Click it and Unblock the Notifications