அதிகார வரம்பை மீறி..நீதிபதி சுவாமிநாதன் நீதித்துறை வரம்பை மீறியுள்ளார்! கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபமேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது எனவும், அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது என தமிழ்நாடு அரசு வாதத்தை முன் வைத்தது.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீப தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலையில் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மலை உச்சியில் தீபம் ஏற்ற காவல்துறை மறுப்பு தெரிவித்ததோடு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாஜகவினர் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வை தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியது.
அதில் தமிழக அரசு பல்வேறு வாதங்களை முன் வைத்தது. குறிப்பாக," திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதன் விதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மனுவை, விசாரணைக்கு எடுத்து விட்டார்; அவர் பிறப்பித்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது;
அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
விளக்கம் அளிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கை எடுத்த அன்றே, தண்டனை வழங்க இயலாது. இந்த வழக்கில் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா என விசாரிக்கலாம் அல்லது அதற்கான விளக்கம் கேட்கலாம். ஆனால் உத்தரவு பிறப்பிக்க இயலாது" என வாதிட்டது.
தொடர்ந்து," தீபத்தூண் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லை என்பதை மனுதாரரும், தனி நீதிபதியும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளனர்; வழக்கு நிலுவையில் உள்ளபோது தனி நீதிபதி உத்தரவிட்ட உடன் உடனடியாக எப்படி தீபம் ஏற்ற முடியும்?" என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வாதத்தை முன் வைத்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் நீதிபதியின் உத்தரவை அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை என மனுதாரர் தரப்பில் கூறிய நிலையில்,மலை உச்சிமலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தாக்கல் செய்தீர்கள்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications