அமமுக உருவாக காரணமே ‘அவங்க’ தான்! புள்ளி வைத்து பேசிய டிடிவி தினகரன்! 2023ல் மெகா ட்விஸ்ட்
மதுரை : ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது எனவும், 2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டுமென பாஜக தலைமை விரும்பும் நிலையில், தனக்கான முக்கியவத்துவம் குறைந்து விடுமென்பதாக எடப்பாடி பழனிசாமி முற்றாக மறுத்து வருகிறார்.
அதே நேரத்தில் அரசியல் கிளைமேட் மாறியுள்ள நிலையில், பாஜக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அதிமுக கட்சிக்குள்ளும் செல்வாக்கு பெறலாம் என அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன்
ஆனால் டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் அதிமுக தனது கையை விட்டு போய் விடுமோ என அஞ்சும் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

கோவை செல்வராஜ்
இந்நிலையில் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி இருப்பது அதிமுகவில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. ஜெயலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவன். அப்படி இருக்கையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் பங்குக்கு கொளுத்திப் போட்டுள்ள நிலையில் அதையே பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனிடம் கேட்டதற்கு ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

திமுக அரசு
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது. போடாத சாலைகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பதுதான் ஒரு கட்சியின் மாண்பு. ஆனால் மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக திமுக பேசிவருகிறது. திமுக அரசு தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும், பொதுமக்கள், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டி திமுகவை தோல்வியடையச் செய்வார்கள்.

தேர்தல் வியூகம்
2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின், ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் இருந்த அதிகாரத்தையும், பணத்தையும் நம்பிதான் அவர்களுடன் சிலர் இருந்தனர். அதிமுக, நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ்தான் காரணம். ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா மௌனம் காப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications