மீண்டும் மதுரை சரவணனுக்கு ஆப்பு.. தவெகவிலும் மரியாதை இல்லை.. பதவி கொடுக்காமல் தவிர்த்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தவெகவில் புதிதாக 27 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த பலருக்கும் மாவட்டச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை சரவணன் மட்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் தவெகவிலும் கட்டமைப்பு ரீதியாக வலுவாக மாற வேண்டும் என்ற திட்டம் தீவிரமாக உள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பொறுப்புகளும் அளிப்போம் என்ற உறுதி கொடுக்கப்படுகிறது.

AIADMK Vijay Saravanan

இதன் காரணமாக 6 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோல் 8 முன்னாள் அமைச்சர்கள், 15க்கும் அதிகமான முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனர். தற்போது அவர்களுக்கு புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தவெகவில் நிர்வாக வசதிக்காக 27 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சி விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளராகவும் நியமனம செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தவெகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பலரும் அந்தந்த தொகுதிக்கான மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 8 பேர் மாவட்டச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 5 மாவட்டச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரை மத்திய தொகுதி மாவட்டச் செயலாளராக முஸ்தபாவும், மதுரை கிழக்கு தொகுதி மாவட்டச் செயலாளராக கார்த்திகேயனும், சோழவந்தான் தொகுதி மாவட்டச் செயலாளராக கருப்பையாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருமே தவெக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இதனால் தங்கப்பாண்டி, கல்லாணை, மருது பாண்டியன் மற்றும் விஷால் கிருஷ்ணா ஆகியோரின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு முக்கிய விஷயமாக அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மதுரை சரவணனுக்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை.

சில வாரங்களுக்கு முன்பாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து மாநில அளவிலான பொறுப்பை கொடுங்கள் என்று கேட்டிருந்தார். அப்படியில்லை என்றால் மாவட்டச் செயலாளர் பொறுப்பாவது வேண்டும் என்று தீவிரமாக இருந்தார். ஆனால் தவெக தலைமை மதுரை சரவணனின் கோரிக்கையை பரிசீலிக்க கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+